மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல்.
அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி அரசு மணிப்பூர் பிரச்சனையை சுமூகமாக அணுகித் தீர்த்து வைப்பதற்கு பதில் இருவரையும் மோத வைத்து பகையாளியாக்கும் வேலையை செய்கிறது.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
