கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் நிரம்பி வழியும் சட்டமன்றங்கள்!

மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

0

ந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் சுமார் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தங்களது பிரமான பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms – ADR) கூறியுள்ளது.

ஏ.டி.ஆர் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் (National Election Watch – NEW) ஆகிய அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது.

எம்.எல்.ஏ.க்கள் தங்களது சமீபத்திய தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்த தரவு எடுக்கப்பட்டது. 28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 நபர்களில் மொத்தம் 4,001 எம்.எல்.ஏ.க்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

பகுப்பாய்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில், 1,136 பேர் அதாவது சுமார் 28 சதவீதம் பேர், கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றவியல் வழக்குகளை கொண்டவர்கள். கேரளாவில் 70 சதவீத எம்.எல்.ஏ.க்களில் அதாவது 135 பேரில் 95 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!


இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மகாராஷ்டிராவில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), மற்றும் தமிழகத்தில் உள்ள 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) தங்கள் பிரமாணப் பத்திரங்களில் கிரிமினல் வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதலாக, டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் (53 சதவீதம்), பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 122 பேர் (50 சதவீதம்), மகாராஷ்டிராவில் 284 எம்.எல்.ஏ.க்களில் 114 பேர் (40 சதவீதம்), ஜார்கண்டில் 79 எம்.எல்.ஏ.க்களில் 31 பேர் (39 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 46 பேர் (39 சதவீதம்), உத்தரபிரதேசத்தில் 403 எம்.எல்.ஏ.க்களில் 155 பேர் (38 சதவீதம்) தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப்பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் இருந்தது.


படிக்க: பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!


223 எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.64.39 கோடியுடன் கர்நாடகாவும், 174 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.28.24 கோடியுடன் ஆந்திராவும், 284 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.23.51 கோடியுடன் மகாராஷ்டிராவும் உள்ளது. மேலும், 59 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.1.54 கோடியுடன் மிகக் குறைந்த சராசரி சொத்துக்களுடன் திரிபுராவும், 293 எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.2.80 கோடியுடன் மேற்கு வங்காளமும், 135 எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.3.15 கோடியுடன் கேரளாவும் உள்ளது.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 4,001 எம்.எல்.ஏ.க்களில் 88 (2 சதவீதம்) பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவின் எம்.எல்.ஏ.க்களில் 223 பேரில் 32 பேர் (14 சதவீதம்), அருணாச்சலப் பிரதேசத்தில் 59 பேரில் 4 பேர் (7 சதவீதம்), ஆந்திரப் பிரதேசத்தில் 174 பேரில் 10 பேர் (6 சதவீதம்) என்ற எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

மேற்கண்ட புள்ளிவிவரங்களின் படி, இங்கு நடைபெறும் போலி ஜனநாயக தேர்தல்களில் மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளில் ஆக அதிகமானவர்கள் இப்படி ஊழல், சொத்துக்குவிப்பு, பாலியல் குற்றங்கள், சமூக விரோத குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிபட்ட அழுகி நாறும் போலிஜனநாயக கட்டமைப்புதான் காவி-காப்பரேட் பாசிச சக்திகள் செழித்து வளர காரணமாக அமைகிறது என்பதே நிதர்சனமான உண்மை.


புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க