போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!

எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது

0

ணிப்பூர் மாநிலத்தில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், மெய்தி இனவெறியர்களால் நிர்வாணமாக்கி இழுத்து செல்லப்படும் வீடியோ வெளியாக நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் போலீசுத்துறை குற்றம் நடந்த இடத்தில் இருந்ததாகவும், தங்களை போலீசுதான் அக்கும்பலிடம் ஒப்படைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

தங்கள் கிராமங்களில் இருந்த இரண்டு குக்கி பெண்கள், மெய்தி இனவெறியர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த காட்டுக்குள் தஞ்சமடைகிறார்கள். பின்னர் அவர்களை தௌபால் போலீசு அழைத்துச் சென்றது. போலீசு நிலையம் செல்லும்வழியில் வாகனத்தை அக்கும்பல் வழிமறித்து நிறுத்தியது, பின்னர் போலீசுத்துறையினரே அந்த இரண்டு பெண்களையும் அக்கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர் கூறுகையில், ”எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது” என்றார்.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


மற்றொரு பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் நான்கு போலீஸ்காரர்களை காரில் பார்த்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

”மணிப்பூர் போலீசு அங்கு இருந்தது, ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை” என்று கூறினார். நான்கு போலீஸ்காரர்கள் காரில் அமர்ந்து வன்முறையைப் பார்ப்பதைக் கண்டதாக உயிர் பிழைத்த மற்றொருவர் கூறினார். ”அவர்கள் எங்களுக்கு உதவ எதுவும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

போலீசுக்கு அளிக்கப்பட்ட ஒரு புகார் மனுவில், மெய்தி கும்பல் அதிநவீன ஆயுதங்களுடன் நடமாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“நான் தப்பிப்பிழைத்த மற்றவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்… ஆனால் தாக்குபவர்கள் எதையும் நினைக்கவில்லை. அவர்கள் எங்களை ஒரு புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மூன்று பேர் என்னைப் பிடித்தார்கள். சித்திரவதை செய்ய விரும்புவோர், தயவுசெய்து வாருங்கள் என ஒருவர் அழைப்பு விடுத்தார்” என்று உயிர் பிழைத்தவர் கூறினார்.

குக்கி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மணிப்பூர் போலீசுத்துறை நான்குபேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட ஒரு நபரின் வீட்டை, அதே கிராமத்தை சேர்ந்த மெய்தி பெண்கள் குழு இடித்து தீ வைத்து கொளுத்தும் வீடியோ நேற்று (ஜூலை 21) அன்று வெளியானது.


படிக்க: “மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!


“மெய்தி அல்லது பிற சமூகங்களாக இருந்தாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைப்பதை ஒரு பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர் நம் சமூகத்தில் இருக்க அனுமதிக்க முடியாது. இது முழு மெய்தி சமூகத்திற்கும் அவமானம்” என்று தீ வைத்த ஒரு மெய்தி பெண் கூறினார்.

மணிப்பூர் போலீசு மெய்தி இனவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மெய்தி இனவெறியர்கள் குக்கி இன பெண்களை பாலியல் நரவேட்டை ஆடுவதை உடனிருந்து வேடிக்கை பார்த்திருக்கிறது – இரண்டு பெண்களைத் தானே அழைத்து வந்து மெய்தி இனவெறியர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. பிஜேபி மணிப்பூர் வன்முறைகளை ஆதரிக்கின்றது என்று மிசோரம் பாஜக தலைவரே கூறிவிட்டார். ஆகவே ஆர்.எஸ்.எஸ் – பிஜேபிதான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்திவருக்கிறது என்பது துலக்கமாக தெரிய வருகிறது.


புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க