னதை உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம்

பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று அதிகாலை 3.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மலைகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு மீட்புப்படையினர் செல்வதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தை இந்த துயரக்காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.

ஹஸ்னா 44 வயது, மௌலே பிராஹிம் கிராமத்தில் சேதமடைந்த வீட்டிற்குள் தனது மகனை முத்தமிடும் காட்சி.
மௌலே பிராஹிமில் இடிந்துப்போன வீடுகளுக்கு வெளியே அமர்ந்துள்ள மக்கள்.
மௌலே பிராஹிமில் சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்.
மொராக்கோவில் மராகேக்-கிற்கு அருகில் ஒரு கிராமத்தில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை புதைக்க சவக்குழி தோண்டும்போது மக்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சி.
மௌலே பிராஹிம் கிராமத்தில் நிலநடுக்கத்திற்குப் பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.
அல் ஹவுஸ் மாகாணத்தில் இடிந்து விழுந்த வீட்டில் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடும் காட்சி.
மௌலே பிராஹிமில் சேதமடைந்த வீடுகள் மற்றும் மசூதி
மராகேஷில் உள்ள பழைய நகரத்தில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த தனது வீட்டின் முன் நின்றுகொண்டு ஒரு பெண் கதறி அழும் காட்சி.
நிலநடுக்கம் காரணமாக நகரத்தின் தெருக்களில் படுத்துறங்கும் மக்கள்.
அல் ஹவுஸ் என்ற மாகாணத்தில் உள்ள மௌலே பிராஹிமில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முன்பாக உறவினர்கள் கதறி அழும் காட்சி.

நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க