போர் என்பது மோதல் அல்ல; போர் என்பது கொள்ளை லாபம் | பேரா.நோம் சாம்ஸ்கி, பேரா.விஜய் பிரசாத்

போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.

ஷ்யா-உக்ரைன் போர் ஏதேனும் ஒருவரின் தோல்வியில் முடிய வேண்டும் அல்லது ராஜீய ரீதியான அமைதித் தீர்வின்படி முடிவுக்கு வர வேண்டும். ரஷ்யா ஒரு மிகப் பெரிய, வலுவான அணு சக்தி நாடு. உக்ரைன், மிகப் பெரிய அளவிற்கு மேற் கத்திய நாடுகளின் ஆதரவோடு போரில் முன்னிறுத் தப்பட்டிருக்கும் நாடு. ஒருவரை வீழ்த்தி ஒருவர் வெற்றி  பெறுவது எளிதாக நடக்கும் என்று தோன்றவில்லை. மாறாக, ராஜீயரீதியான தீர்வுக்கு செல்வதே ஒரே வழி.  போர் நீடிக்க நீடிக்க, அது சுழல் ஏணி போல மேலே மேலே சென்று இரு தரப்பையும் ஒரு கூட்டுத் தற்கொலை என்ற இடத்திற்கே இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது.  இந்தப் போர் நீடிக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது. அதன் நோக்கம், ரஷ்யாவை முற்றிலும் பலவீனமடைந்த நாடாக மாற்றுவதே. இதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் உள்பட உயரதிகாரிகள் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள். அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் கொள்கையில் சேர்ந்து நிற்கிறார்கள்.

உக்ரைன் திட்டங்கள் தோல்வி

ஆனால், உலகின் பிற அனைத்து நாடுகளும் இந்தப் போருக்கு ராஜீய ரீதியான தீர்வு காணுமாறு ஒரே கருத்தாக கூறி வருகின்றன. போர் நீடித்தால் முதல் பெரும் சேதம் உக்ரைனுக்குத்தான் என்பதை இந்நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே உக்ரைன் தனது பல்லாயிரக்கணக்கான வீரர்களை இப்போரில் இழந்து விட்டது. மிகக் கடுமையான பொ ருளாதாரச் சிதைவைச் சந்தித்துள்ளது. ரஷ்யாவைச் சுற்றி வளைத்து தாக்கி விட முடியும் என்ற உக்ரை னின் திட்டங்கள் தோல்வியடைந்து விட்டன. உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் தனி பாது காப்புப் படையிலிருந்து கூட பலர் வெளியேறி விட்டார்கள்.

இராக், லிபியா போன்று இல்லை

உக்ரைனில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கி றது என்ற போதிலும், அது இந்த உலகின் பல  பகுதிகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டணிப் படையினர் நடத்திய மிக மிகக் கொடிய யுத்தத்தினைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 2003-இல் இராக் மீது அமெ ரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நடத்திய யுத்தம்;  2011-இல் லிபியா மீது நடத்திய யுத்தம் போன்றவற்றில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைகள் அந்த நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பையே குண்டு வீசித் தகர்த்தன. எண்ணெய் வளக் கட்டமைப்பு களை அழித்தொழித்தன. ஒட்டுமொத்த போக்கு வரத்தையும் சிதைத்து அழித்தன. தொலைத் தொடர்பு அமைப்பு முறையை முற்றாக சிதைத்தன. சுருக்கமாகச் சொன்னால், சமூகம் முற்றிலும் ஸ்தம்பிக் கச் செய்தன. இவற்றில் எதுவும் உக்ரைனில் நடக்க வில்லை. ஈரானிலும், லிபியாவிலும் பயன்படுத்தப் பட்டது போல யுரேனியமும், வெள்ளை பாஸ்பரசும் கலந்த குண்டுகள் வீசப்படவில்லை. சட்டப்பூர்வமான வழியிலோ அல்லது சட்டப்பூர்வமற்ற வழியிலோ  உக்ரைன் மீது ரஷ்யா இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.  அதுமட்டுமல்ல, இராக்கில் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்திய போது, அவர்கள் உட்பட எந்த ஒரு மேற்கத்திய நாட்டின் தலைவரும், பாக்தாத்திற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. ஆனால் உக்ரைனுக்கு இடைவிடாமல் மேற்கத்திய தலைவர்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை பகிரங்கமாகவே அரங் கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பாதிப்பு

இந்தப் போரின் கசப்பான விளைவுகள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவோடு நின்று விடப் போவதில்லை. உலகின் பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான மக்கள் உணவு தானியம் வந்து சேராமல் பட்டினியின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். வளம் மிகுந்த கருங்கடல் பிரதே சத்திலிருந்து உணவு தானியங்களும், உரங்களும் பிற நாடுகளுக்கு விநியோகம் ஆகாமல் நிற்கின்றன. இதுதான் சமயம் என்று உலக உணவுக் கட்ட மைப்புக்குள் புகுந்து வெகு சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு விலைகளை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். இந்த பின்ன ணியில் 2022-ஆம் ஆண்டு ஜூலையில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை நான்கு மாத காலத்திற்கு “கருங்கடல் உணவு தானிய முன் முயற்சி” எனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, 2 கோடி  டன் உணவு தானியங்களை இந்தப் பிரதேசத்திலி ருந்து உலக நாடுகளுக்கு செல்ல வழி செய்தன. அது  மேலும் சில மாதங்கள் நீடிக்கப்பட்டது. போர் நீடிக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் என்னாகும் என்று தெரியவில்லை. ரஷ்யா- உக்ரைன் போருக்கு முன்பே மனிதகுலம் ஒரு மிகப் பெரிய காலநிலைப் பேரழிவில் சிக்கும் அபாயத்தை எதிர்கொண்டிருந்தது. 2002-இல் வெகு ரக ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து தன்னிச் சையாக முறித்துக்கொண்டு அமெரிக்கா வெளியேறி யது;  2019-இல் கையெழுத்தான அணுசக்தி நாடுக ளின் இடைக்கால ஒப்பந்தம்; 2020-இல் விண்வெளியை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஆகியவற்றை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டதன் விளைவாக மனிதகுலத்தில் மிகப் பெரிய அழித்தொழிப்பு வேலையை அவர்கள் ஏற்கெ னவே துவங்கிவிட்டார்கள். இந்தப் பின்னணியில், தெற்கு சீனக் கடல் மற்றும் உக்ரைன் போர் ஆகிய இரண்டு பிரச்சனைகளை மையப்படுத்தி உலகளா விய முறையில் பதற்றத்தை தூண்டிவிடுவது இவர்க ளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கே. சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுத்து நிறுத்த கால நிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங் கள், உடனடியாகவே நீர்த்துப் போகச் செய்யப் பட்டுள்ளன. எனவே அந்த ஒப்பந்தங்கள் மனிதகுலத் திற்கு எந்த நம்பிக்கையையும், உறுதியையும் அளிக்கவில்லை.

பகடைக்காயாக உக்ரைன்

உக்ரைனை பகடைக் காயாக வைத்து அமெரிக்கா வும், பிரிட்டனும் கூட்டாளிகளும் சூதாடுகின்றன என்பதை யாரும் விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அந்த சூதாட்டம் என்னவென்றால், அவர்களால் ‘வெறி பிடித்த பைத்தியக்கார மனிதர்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள புடின் தோல்வியைத் தழுவினால், அவர் அமைதியாக பையை தூக்கிக் கொண்டு நடை யைக் கட்டிவிடுவார்; அதன்பிறகு தலைநகர் கீவ் உட்பட உக்ரைனை தங்களது கைகளுக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே. ஆனால், அது நடக்கக்கூடிய காரியமா? 2014-ஆம் ஆண்டிலேயே அப்போதைய நேட்டோ ராணுவக் கூட்டணியின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல் டன்பர்க், “நாங்கள் உக்ரைனில் நீண்ட போருக்கு தயாராகி வருகிறோம்” என்று கூறினார். அந்த நீண்ட போர் தான் இப்போது நடந்து வருகிறது. ஆனால் இதற்கான விலையை நேட்டோ கூட்டணி தரவில்லை; மாறாக, அப்பாவி உக்ரைனியர்கள் தான் தந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.  ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்காக மிகப் பெரிய சூதாட்டத்தில் உக்ரைனைத் தள்ளியுள்ளது அமெ ரிக்கா. இடைவிடாமல் ஆயுதங்களை அனுப்புகிறது. ராஜீயரீதியான தடைகளை ரஷ்யாவுக்கு ஏற்படுத்திவிட்டால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. முதலில் உக்ரைன் மக்களிடையே ரஷ்யாவுக்கு எதி ரான உணர்வும் வெறியும் ஊட்டப்பட்டு இது துவங்கி யது; இப்போது அவர்களே அமைதிக்கான சாத்தி யக்கூறுகள் இல்லையா என்று ஏங்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகள் குதூகலம் 

போர் என்பது போர்தான். போர் என்பது ஒவ்வொரு வருக்கும் பேரழிவு. அது நீடிக்க நீடிக்க பெரும் பதற்றம். ஆனால், போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள். உக்ரைனில் பயன் படுத்துவதற்காக அமெரிக்க ராணுவ தளவாடங்களை புதுப்பிப்பதற்காகவும், கூடுதலாக ஆயுத உற்பத்தி செய்வதற்காகவும் தனியார் கார்ப்பரேட் ஆயுத கம்பெனிகளுக்கு 1.2 பில்லியன் டாலர் அளவிற்கு ஒப்பந்தங்கள் அளித்திருப்பதாக 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத கம்பெனிகளான நார்த் ராப் குரும்மன் நிறுவனத்தின் பங்குகள் 40 சத வீதம் அதிகரித்தன; லாக்ஹீட் மார்ட்டின் நிறுவ னத்தின் பங்குகள் 37 சதவீதம் அதிகரித்தன.  அதேபோல ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயு செல்லக்கூடாது என தடை விதித்ததன் விளைவாக, மேற்கத்திய பெரும் கார்ப்ப ரேட் எண்ணெய் கம்பெனிகளான செவ்ரான், எக்ஸ்ஸான் மோபில், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் போன்றவை 2022-இல் கூடுதலாக 134 பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்துள் ளன. இவை இந்த போர் நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றன.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (செப்.24) ஏட்டில்  இடம் பெற்றுள்ள கட்டுரையின் பகுதிகள்
சுருக்கம்: எஸ்.பி.ஆர்

நன்றி: தீக்கதிர்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க