சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை

"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?

சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை

க்சலைட் ஆக இருந்து தற்போது அமைச்சராக பதவியேற்றார்”.

“அவர் பதவியேற்புக்கு அழைக்கப்படும்போது மக்கள் கரகோஷம் எழுப்பினர்”.

இந்த செய்திகள் கடந்த சில தினங்களாக ஊடகங்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன. இத்தனை ஆயிரம் பேர் ஒருவருக்கு வரவேற்பு கொடுக்கும் போது அவர் கண்டிப்பாக நல்லவராகத் தானே இருப்பார். இப்படி எல்லாம் பலரும் தங்களை தாங்களே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னுடைய 14-ஆவது வயதில் 1987-ஆம் ஆண்டு ஜனசக்தி அமைப்பில் இணைந்த அனுசுயா என்கிற சீதாக்கா, 1997-ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து வெளியேறி போலீசின் சரணடைவு திட்டத்தின்படி சரணடைகிறார்.

2004-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர், முழுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்து 2009-ஆம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றி பெறுகிறார். 2014-ஆம் ஆண்டு அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடையும் அவர், 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் முழுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நக்சல்பாரி குழுக்களில் பணியாற்றிய தோழர்களையெல்லாம் சந்திரபாபு நாயுடு சுட்டுக் கொண்டிருக்கும் போது, அந்தக் கட்சியில் அவர் ‘தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தார்’. எதற்காக சந்திரபாபு நாயுடு கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் தஞ்சமடைந்தார்? ஏதாவது கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றனவா? வாய்ப்பு இருக்கிற போதெல்லாம் கட்சி தாவி சிறந்த ஓட்டுப் பொறுக்கியாக அல்லவா மாறி இருக்கிறார். அதற்கு கிடைத்த பரிசல்லவா அமைச்சர் பதவி!


படிக்க: பாடகர் கத்தார் இறந்து விட்டார்…


ஒரு காலத்தில் நானும் நக்சலைட்டாக இருந்தேன் என்று ஜக்கி வாசுதேவ் கூட சொல்லி இருக்கிறாரே! “முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா?
இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?

தடா பெரியசாமியும் கூட ஒரு காலத்தில் நக்சல்பாரிக் குழுவில் செயல்பட்டதாக சொல்லிக் கொள்கிறார். அதிலிருந்து தடா பெரியசாமியை மதிப்பிடுவதா? இப்போது பா.ஜ.க-வில் இருந்து பூணூல் மாட்டிக்கொண்டு திரிகிறாரே அதிலிருந்து மதிப்பிடுவதா?

நக்சல்பாரி இயக்கத்தின் குரலாக அன்று இருந்த கத்தாரை நினைத்து பெருமைப்படுவதா? செய்த ‘தவறு’களுக்கு மனம் வருந்தி பார்ப்பனர்களின் காலை கழுவிக் கொண்டிருந்தாரே அதிலிருந்து மதிப்பிடுவதா?

வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அரவிந்தர் பின்னாளில் சாமியாராக மாறிப்போனார். இப்படி கடந்த கால நல்லவர்கள் பிற்கால இழிந்தவர்களாக மாறியதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் பதில் ஒன்றுதான்.

இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதில் தெளிவு இருந்தாலே போதும்.


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க