2024 நாடாளுமன்ற தேர்தல்:
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்
தெருமுனைக் கூட்டம் – இராணிப்பேட்டை

நெமிலி பெரியார் சிலை அருகில்,
7.1.2024 நேரம் மாலை 5 மணி.

பத்திரிகை செய்தி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து இந்த தெருமுனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதை மக்கள் அதிகாரத்தின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் தோழர் மோகன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். நெமிலி 50 வருட போராட்ட சிந்தனை கொண்ட பகுதியாக உள்ளது என்றும் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர், பெரியார் இன்னும் சில போராட்ட வீரர்கள் இவர்களுடைய பிறந்தநாள், நினைவு நாளை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்து கூட்டங்கள் நடத்துவது என தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று பி.ஜே.பி.யால் உழைக்கும் மக்கள் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை கூறி தலைமை உரையை நிறைவு செய்தார்.

காஞ்சிபுரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயற்குழு உறுப்பினர் சங்கர் அவர்கள் தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை பற்றியும் இந்த அரசு முதலாளிகளுக்கு எப்படி சேவை செய்கிறது என்பதையும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் உரையாற்றினார்.

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தோழர் மஸ்தான் அவர்கள் இன்று ஜனநாயகம் தேர்தல் முறை யார் இந்த ஆட்சியில் கொண்டு வந்தார்கள் எந்த வடிவத்தில் உள்ளது என்பதையும் நமக்கு தேவையான ஜனநாயக முறை எது என்பதையும் தேர்தல் என்றால் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் ஆனால் இந்த அரசிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வியும் முன் வைத்தார். நெமிலி பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கௌதமன் அவர்கள் பட்டியலின மக்கள் மீதும், தலித் மக்கள் மீதும் இன்று திராவிட மாடல் என கூறும் இந்த அரசு இதுவரை என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பினார். இன்று முதலாளித்துவத்தின் பாதிப்பு 1990 காலக்கட்டத்தில் காட் ஒப்பந்தம் கையெழுத்து ஆனபோது இதே நெமிலியில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர அமைப்புகள் போராடி அதற்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இந்த முதலாளித்துவத்தால் இன்று தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. இப்போதாவது நாம் மாற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.


படிக்க: வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | புரட்சிகர பாடல்கள்


அருந்ததியர் பேரவை தலைவர் குருவை குமார் அவர்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் இன்றுவரை எஸ்சி – எஸ்டி யினருக்கு அந்த இட ஒதுக்கீடு முழுமையாக சேர்கிறதா என்பதையும், எந்த ஒரு உரிமையும் போராடி தான் நாம் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி உரையை நிறைவு செய்தார்.

ராணிப்பேட்டை மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் ஏன் வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் என்ற கோரிக்கை முன் வருகிறது, இது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிரச்சாரம் அல்ல என்பதையும், இன்று இந்த அரசியல் யாருக்காக உள்ளது என்பதையும் பதிவு செய்தார். மேல்மா சிப்கார்டில் போராடிய விவசாயிகள் மீது இதே திராவிட அரசு குண்டாஸ் போடுகிறது. குண்டாஸ் சட்டம் என்பது சமூக விரோதிகள், தொடர் குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடுவார்கள். ஆனால் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தை போடுகிறது, இந்த அரசு. ஏறி வேலைக்கு செல்லும் மக்களை சிப்காட்டுக்கு ஆதரவாக சிப்காட் வேண்டும் என்று அதே மேல்மா கூட்ரேட்டில் கூட்டம் நடத்துகிறது ’திராவிட மாடல்’ அரசு. வேங்கை வயல் ஆகட்டும், நாங்குநேரி ஆகட்டும், சாதி ஆணவ படுகொலைக்கும், கலவரத்திற்க்கும் எதிராக இந்த திராவிட மாடல் உழைக்கும் மக்களை அணி திரட்டி ஏன் போராடவில்லை. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி இந்த சாதி அமைப்பை பாதுகாக்கக் கூடிய அரசாகத்தான் திமுக உள்ளது என்பதை சுட்டி காட்டினார். பட்டியலின மக்கள் மீது சிறுநீர் கழித்ததை வன்மையாகவும் அதற்கு துணையான போலிஸை கண்டித்து உரையாற்றியனர்.

சென்னை மண்டலம் மக்கள் அதிகாரத்தின் இணைச் செயலாளர் தோழர் புவன் ஜனாயகம் விதிமீறல் எங்கெல்லாம் இந்த பிஜேபி ஆட்சியில் நடக்கிறது என்பதையும் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 150 எம்பிக்கள் இன்றுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும் உலக பணக்காரர் பட்டியல் இரண்டாம் இடத்தில் உள்ள அதானியை விமர்சித்தால் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த மோடி அரசில் இதுதான் ஜனநாயக படுகொலை இன்று முதலாளிக்கு எதிராக யார் போராடினாலும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்கள் அது பத்திரிகையாளராக இருந்தாலும் சரி, சமூக செயல்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி, அது அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தூத்துக்குடி ஐ.ஜி யாக இருந்த அகிலேஷ் அவர்களுக்கு இன்று ஏடிஜிபியாக பதவி உயர்வு அப்போ இதே திராவிட அரசுதான் தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் வாங்கி தருவதாக கூறி ஆட்சியில் அமர்ந்த அரசு இன்றுவரை ஒரு துளி மண்ணைக் கூட தூத்துக்குடி மக்களுக்காக எடுத்து போடவில்லை. இவர்களிடம் நாம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? இல்லை.

மேலும் இவர்கள் ஆதரிக்கும் இந்தியா கூட்டணியிடம் நீட் தேர்வு ஜிஎஸ்டி, தொழிலாளர் சட்ட திருத்தம், வேளாண் சட்டத்திருத்தம் இவைகளை ரத்து செய்யுமா? என்ற கேள்விக்கு இந்தியா கூட்டணியிடம் பதில் இல்லை. இவர்களிடம் நாம் இந்த தேர்தலிலோ அல்லது இவர்கள் கூட்டணி ஆதரித்தாலோ நமக்கு விடுதலை என்பதோ, சுதந்திரம் என்பதோ, ஜனநாயகம் என்பதோ எந்த வார்த்தையில் கூறினாலும் நமக்கு வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை. நமக்கான விடுதலை, நமக்கான சுதந்திரம் என்பது இந்த அரசமைப்பில் இல்லை பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை நிறுவும்போது மட்டும் தான் அதற்கு சாத்தியம் என்று தனது உரையை நிகழ்த்தினார்.

இறுதியாக வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர் சுந்தர் அவர்கள் நன்றி உரையை ஆற்றினார்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க