மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு

இங்கோ, மோடி-அமித்ஷா கும்பலின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், தலையாட்டி பொம்மையாக உச்சநீதிமன்றம். ஆகையால், இது பாசிச மோடி-அமித்ஷா கும்பல் நடத்திய தேர்தல்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மீண்டும் பாசிச மோடி ஆட்சி வரக்கூடாது, மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி அமையக் கூடாது – இது, கோடிக்கணக்கான இந்திய மக்களாகிய நமது ஒரே எதிர்ப்பார்ப்பு!

ஆனால், தேர்தல் முடிவோ, பாசிச பா.ஜ.க.வைத் தோற்கடிக்கவும் இல்லை, அறுதிப் பெரும்பான்மை கிடைக்கச் செய்யவும் இல்லை. கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளியதன் மூலம் அதற்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

எனினும், பா.ஜ.க.தான் பெரிய கட்சி; மோடி தான் மீண்டும் பிரதமர்; மோடி-அமித்ஷா கும்பலின் கையில்தான் ஆட்சி அதிகாரம் என்ற அதே பழைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகையால், இந்தத் தேர்தல் முடிவானது, பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலையும் அதன் பின்னணியில் இருக்கும் அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலையும் அதே பழைய முறையில் தொடர வழிவகுத்திருக்கிறது. அச்சுரண்டல் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்ற கோடிக்கணக் கான மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் சவாலான, மேலும் உறுதியான, முன்னேறியப் போராட்டங்களைக் கோருகின்ற முடிவாகும்!

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடக்கும், அதில் ஆளுங்கட்சிக்கு சிற்சில சலுகைகள் வழங்கப்படும். அது வழக்கமான தேர்தல். இங்கோ, மோடி-அமித்ஷா கும்பலின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், தலையாட்டி பொம்மையாக உச்சநீதிமன்றம். ஆகையால், இது பாசிச மோடி-அமித்ஷா கும்பல் நடத்திய தேர்தல்!

தாங்கள் நடத்திய தேர்தலில், தங்களுக்கே பெரும்பான்மை கிடைக்காமல் போனது எப்படி? இது பாசிஸ்டுகளின் குழப்பம். அதனால்தான், தாங்கள் கனவிலும் நினைத்திராத இந்த முடிவை, பாசிச மோடி-அமித்ஷா கும்பலாலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களாலும் ஏற்க இயலவில்லை.

மேலும், தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் இந்த இருவகை உணர்வுகளும் அல்லாமல், இந்தத் தேர்தல் முடிவை “பா.ஜ.க.விற்கு எதிரான வெற்றி”யாக குதூகலிக்கின்றனவே “இந்தியா” கூட்டணிக் கட்சிகளும் அவற்றின் ஆதரவு ஊடகங்களும். இந்த உணர்வை எப்படி புரிந்து கொள்வது?

இவைதான், நாம் பரிசீலிக்க வேண்டிய மையமான பிரச்சினைகள்!

வெளியீடு:
மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி:
என்ன செய்யப் போகிறோம்?

வெளியிடுவோர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை

முதல் பதிப்பு: ஜூன் 2024

தொடர்புக்கு:
97916 53200 – 94448 36642
73974 04242 – 99623 66321

நன்கொடை: ₹ 20
G-Pay No: 97916 53200


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க