விருதுநகர் மாவட்டம் T.கல்லுப்பட்டி அருகே கோவிலாங்குளம் கிராமத்தின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை!

கொலை செய்த கும்பலை கைது செய்!

சிறையில் அடை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பின்புலமாக செயல்படும் சாதி சங்கங்களை தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை தடை செய்!

என்கிற கோரிக்கையுடன் ஜூன் 27 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி தலைமையில் நடந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் கலந்துகொண்டன.

படுகொலை சம்பவம்:

கோவிலாங்குளத்தை சேர்ந்த அழகேந்திரன் என்கிற அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவரும் ‘தேவந்திர’ சமூகத்தை சார்ந்த பெண் ஒருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 24.6.2024 அன்று திங்கள்கிழமை 11 மணி அளவில் அழகேந்திரன் கள்ளிகுடியில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அப்பெண்ணின் உறவினரான பிரபாகரன் தொலைப்பேசி மூலம் அழகேந்திரனிடம், இந்த பிரச்சினையை சமரசமாக பேசி முடித்துக் கொள்ளலாம் என நயவஞ்சகமாக பேசி அழகந்திரனை அழைத்து சென்றுள்ளான். காதலித்ததற்காக அழகேந்திரன் தலையை துண்டித்து ஆணுறுப்பை சிதைத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள் பிரபாகரன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள்.

இதனை அறிந்த அழகேந்திரன் தாய் தகப்பனார் கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கொலைகாரர்களுக்கு சாதகமாக பதிலளித்துள்ளது போலீசு.

இதனைக் கண்டித்து இரண்டு நாட்களாக தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடக்கும் தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் கட்சிகளும் இக்கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இருப்பதை அம்பலப்படுத்திப் பேசினர்.

சாதி சங்கங்களுக்குள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலும் ஆதிக்கமும் இருக்கின்றது என்பதை எமது அமைப்பு தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வரும் சூழலில், இச்சம்பவம் என்பது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

சாதி வெறியன் பிரபாகரன் போன்றவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு என்பது, கிருஷ்ணசாமி – ஜான் பாண்டியன் போன்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வழியில் செயல்படக்கூடிய சிந்திக்க கூடியவர்களின் வெளிப்பாடுதான். அது தான் இந்த படுகொலைக்குக் காரணம்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பின்புலமாகச் செயல்படும் ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி இன்னும் இது போன்ற சிந்தனை போக்குடைய பிரபாகரன் போன்ற சாதி வெறியர்களின் செயலை முறியடிப்போம்!

இவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவோம்!

பட்டியலின மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

தகவல்:
ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க