க்கள் அதிகாரத்தின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பாலில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண் வழக்கில் குற்றவாளி ஆண்டனி ஆகாஷ் மீது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது!

குற்றவாளியுடன் இணைந்து மருத்துவ தடயங்களை அழித்த விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்!

தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண், ஆண்டனி ஆகாஷ் என்பவனால் 21 நாட்கள் கடத்திச் செல்லப்பட்டு பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

குற்றவாளி மீது பாலியல் வன்புணர்வு, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே சுமார் நான்கு மாதங்கள் கழித்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வழக்குப் போடப்பட்டது. ஆண்டனி ஆகாஷ் கைது செய்யப்பட்டான்.

குற்றம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். ஆண்டனி ஆகாஷுடன் விருத்தாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டவர்கள் இணைந்து கொண்டு அந்தப் பெண் காணாமல் போனார் என்ற வழக்கை மட்டுமே பதிவு செய்தனர்.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு வேறு வழியின்றி பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 417 ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டன.

எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், பெண் கடத்தல் ஆகிய பிரிவுகள் பதியப்படவில்லை என்று தொடர்ச்சியாகப் பல இடங்களிலும் முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் அம்மாவும் நேரடியாக சாட்சியமளித்தனர்.

ஆணையத்தில் தோழர் மருது (எ) இராமு, வித்யா ஆகிய வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.


படிக்க: மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும் விருதாச்சலம் போலீசின் செயல்பாடும் | உண்மை அறியும் குழு அறிக்கை


பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது அம்மா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரின் அப்பாவிற்கும் ஆதரவாக மக்கள் அதிகாரம் தோழர்கள் வந்திருந்தனர். 11.11.2024க்குள் எஸ்.சி / எஸ்.டி வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை என்று வினா எழுப்பியதோடு இவ்வழக்கு தொடர்பான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தமிழ்நாடு மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையம் அறிவிக்கை அனுப்பியது.

கடந்த 11.11.2024 அன்று எஸ்.சி / எஸ்.டி ஆணைய உறுப்பினர்களை நேரில் சந்தித்து குறித்த நாளில் அறிக்கை கொடுக்காத இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோழர் மருது முறையிட்டார்.

தமிழ்நாடு மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையம் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு பதில் அனுப்புவதற்கு இறுதி வாய்ப்பாக 09.12.20224 தேதியைத் தீர்மானித்து அறிக்கை அனுப்பியது.

தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண், மாதம் 6,500 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அவரது தாயார் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது தந்தை, இதுதான் அந்த குடும்பம்.

அந்தப் பெண்ணுக்கு தனக்கு நேர்ந்த அநீதியைக் கூட முழுமையாகச் சொல்லத் தெரியாது.

திருமணம் செய்து கொள்கிறேன் என்று கடத்திச் சென்று 21 நாட்கள் கழித்து அனாதையாக விட்டுச் சென்றான் அந்த ஆண்டனி ஆகாஷ்.

அவனிடம் பணம் பெற்றுக் கொண்டு விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மிகப்பெரிய அநீதியை விளைவித்து அராஜகமாக நடந்து கொண்டார்கள். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்-எல்) லிபரேஷன் கட்சி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் தோழர்கள் அக்குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த நிலையில், இப்பிரச்சனையை அடுத்த கட்டமாக ஊடகங்களுக்கும் அரசின் மேற்பார்வைக்கும் கொண்டு சென்று போராட்டமாக மாற்றியது மக்கள் அதிகாரம்.

உண்மை அறியும் குழு அறிக்கையை அனைத்து கட்சியினரிடமும் ஊடகங்களிடமும் மக்கள் அதிகாரம் கொண்டு சேர்த்து இதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றியது.

மக்கள் மத்தியில் துண்டறிக்கைகளாகவும் சுவரொட்டிகளாகவும் பரப்புரையாகவும் மக்கள் அதிகாரம் கொண்டு சென்றது.

அதன் விளைவாக வேறு வழியின்றி கடலூர் மாவட்ட போலீஸ், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இன்றைய தினம் 19.11.2024 அவ்வழக்கில் எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(2)(v) சேர்க்கப்பட்டுள்ளது.


படிக்க: மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமை | SC-ST ஆணையத்தில் புகார் | வீடியோ


அந்தப் பெண் மாற்றுத்திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் என்ற பிரிவும் பெண் கடத்தப்பட்டார் என்ற பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். மேலும் குற்றவாளியுடன் இணைந்து சுமார் 4 மாதங்கள் வேண்டுமென்றே குற்றவாளியைக் கைது செய்யாமல் ஆட்கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் சாட்சியங்களை அழித்த இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகன் உள்ளிட்டோர் மீதும் உரிய வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்கிறது கடலூர் மாவட்ட போலீஸ்.

குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கும் போலீசை அவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்ப்பதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.

இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகன் ஆகியோர் தண்டிக்கப்படும் வரை மக்கள் அதிகாரம் போராடும்.

தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க