வேங்கைவயல் ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்பு – திமுக-வின் சாதியப் போக்கு

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதாகவும் மிகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே நகரத்தில் மறுநாள் (05.01.2025) திமுக அமைச்சர்கள் வருவதற்காக மிகவும் நெருக்கடியான பகுதியில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வேங்கைவயல் கொடுமைக்கெதிரான ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்பு;
திமுகவின் அப்பட்டமான சாதியப் போக்கு:

வேங்கைவயல் மனிதக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த மாபெரும் சமூக அவமானம் நடந்து இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாமாண்டு தொடர்ந்து வரும்நிலையில், இவ்வளவு பெரிய குற்றமிழைத்த குற்றவாளிகளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென நாளை (04.01.2025) புதுக்கோட்டையில் பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பட்டத்திற்கு தமிழக அரசு திடீரென இன்று (03.01.2025) மாலை அனுமதி மறுத்திருக்கிறது. இந்த அனுமதி மறுப்பில் குளறுபடிகள் உள்ளதோடு, நியாயங்கள் மீறப்பட்டுள்ளன.

  1. தமிழ்முதல்வன் பெயரில் அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் வேம்பை சின்னதுரை பெயரில் மறுக்கப்பட்ட கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரிய குளறுபடி மட்டுமில்லாமல் முறையாக மறுக்கவில்லை என்பதும்கூட.
  2. 2024 திசம்பர் 30 ஆம் நாளே அனுமதி வேண்டிய கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 2025 ஜனவரி 03 நாள்தான் மிகவும் தாமதிக்கப்பட்டு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஜனநாயகத்தை அத்துமீறிய செயல்.
  3. எந்தவொரு பதற்றமும் இல்லாத நிலையில் புதுக்கோட்டை உட்கோட்டத்தில் தேவையில்லாமல் 30 (2) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான சமூக ஏமாற்ற/ சமூக விரோதப் போக்கு.
  4. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடமானது 1. பொதுமக்கள் நடமாடும் இடம் 2. வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள இடம் என்பதோடு 3. உள்ளூர் வெளியூர் பேருந்துகளுக்கான போக்குவரத்து இடையூறு ஏற்படும் இடம் என்பதாகவும் தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனுமதி மறுப்பதற்காகக் கூறும் காவல்துறையின் பொய்களின் வெளிப்படையான சான்று.
  5. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதாகவும் மிகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே நகரத்தில் மறுநாள் (05.01.2025) திமுக அமைச்சர்கள் வருவதற்காக மிகவும் நெருக்கடியான பகுதியில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  6. இவ்வாறாக மறுக்கப்பட்ட கடிதத்தை ஏற்றுக்கொண்டவரின் கையொப்பம் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளது.

இப்படியான நியாயம் மறுக்கப்பட்ட, குளறுபடிகள் நிறைந்த ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

அரசின் நிர்வாகத்தை/அதிகாரத்தைத் தவறாகப் பட்டியல் மக்களுக்கெதிரான சாதியநலப் போக்கோடு கையாளும் திமுகவின் வஞ்சகத்தை அம்பலப்படுத்துவோம்! ஆர்ப்பாட்ட அனுமதி வேண்டி முறையாக நீதிமன்றம் செல்வோம்!

– தமிழ்முதல்வன்
ஒருங்கிணைப்பாளர்,
பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு.

– சார்ப் அ. முரளி,
ஒருங்கிணைப்பாளர்,
வேங்கைவயல் ஆர்ப்பாட்டக் குழு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க