06.03.2025

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மத நல்லிணக்க கூட்டமைப்பு
ஆகிய அமைப்புகளுக்கு பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை!

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றத்துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு
தி.மு.க அரசே துணை போகாதே!

பத்திரிகை செய்தி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். சில நூறு ஆண்டுகளாக சிக்கந்தர் தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆடு பலியிடும் உரிமையை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தடுத்த நிறுத்தினார். அதை சரி என்று ஆமோதித்து திருமங்கலம் ஆர்.டி.ஓ தர்காவில் பலியிடக் கூடாது என்ற உத்தரவு பிறப்பித்தார். அதை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் 144 உத்தரவு பிறப்பித்தார்.

அந்த 144 உத்தரவை மீறி திட்டமிட்டு வெறியூட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் நீதிமன்ற அனுமதியுடன் போராட்டம் நடத்தியது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிசக் கும்பலுக்கு அனுமதி கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு துடியாய்த் துடித்தது.

அந்தப் போராட்டத்தில் தர்காவை இடிப்போம் என்றும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்றும் பாசிச கும்பல்கள் கொக்கரித்தன.

ஆனால் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்ற விடக்கூடாது மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றுவோம் என்று பேசுவதற்கும் துண்டறிக்கைகள் கொடுப்பதற்கும் கூட மதுரையில் எங்கேயும் அனுமதிக்க மறுக்கிறது போலீசு. பரப்புரை செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், தி.மு.க அரசின் போலீசால் எச்சரிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்.

இருந்த போதிலும் கூட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் தொடர்ந்து தங்களுடைய பாசிச நடவடிக்கைகளை மதுரையில் மேற்கொண்டே வருகிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆகியவை தனித்தனியே பொதுக்கூட்டமும் பேரணி மற்றும் மாநாடு நடத்தவும் அனுமதி கேட்டிருந்தன. கேட்கப்பட்ட அனுமதியை போலீசு மறுத்தது.

அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் கொடுக்கப்பட்டன. ஏற்கனவே மதுரையில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள் என்று கூறி மத நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு அனுமதியை மறுத்து இருக்கிறது நீதிமன்றம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – மாநாடு நடத்த கடும் எதிர்ப்பை தி.மு.க அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பலுக்கு குறிப்பிட்ட நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கிகக் கொடுப்பதில் முன்னணியாக இருந்த தி.மு.க அரசின் வழக்கறிஞர், மத நல்லிணக்கம் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வரும் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர், திருமங்கலம் ஆர்.டி.ஓ, மதுரை கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – மாநாடு நடத்துவதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க