திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையிலான இந்து முன்னணி கும்பலின் பாடல்களைத் தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரைத் தொடர்ந்து “இந்து முன்னணியின் பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளன” என தோழர் ராமலிங்கம் அவர்களுக்கு சைபர் கிரைம் போலீசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அறிக்கை:
”மனுவின் புகார்தாரர் திரு.ராமலிங்கம் ஆகிய தாங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருவதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுசெயலாளர் ராமசீனிவாசன் என்பவர் த டிபேட் என்ற ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் போது சிக்கந்தர் தர்ஹாவிற்கு ஆடுகோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என்று பேசியதாகவும், மதநல்லிணக்கத்துடன் நடந்துகொள்ளும் மக்களை முட்டாள்கள் என்ற திட்டுவதினை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், மேலும் இந்து முன்னனியினர் “கருணையே இல்லாமல் களத்திற்கு வாடா” என கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட முஸ்லீம்கள் மீது கொலை வெறி தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளதாகவும், எனவே கலவரத்தை தூண்டும் விதமாக இருந்த பதிவினை தடை செய்ய வேண்டி தாங்கள் கொடுத்த புகார் சம்மந்தமாக, சைபர்கிரைம் காவல்நிலையத்தில் விசாரணை செய்ததில், தாங்கள் தெரிவித்திருந்த சம்மந்தப்பட்ட பதிவுகள்:
1.https://youtu.be/zH8EpeviEk?si=ZQi2BaldZ6xp7t
2.https://youtu.be/pb8uZlyEypU?si=dgxIXhGRwLFsTZdE
நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்மந்தமான தங்களின் மனு மீதான நடவடிக்கை நிறுத்தம் செய்யப்படுகிறது என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.”

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram