உசிலம்பட்டி கிளை:
மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
***
யா.ஒத்தக்கடை கிளை:
மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை மாநாடு மார்ச் 20 அன்று வெற்றிகரமாக மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இதில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கிளையின் செயலாளராக தோழர் விஜி பொறுப்பெடுத்துக் கொண்டார். கிளையின் துணைச் செயலாளராக தோழர் பரமேஷ் பொறுப்பெடுத்துக் கொண்டார். கிளையின் பொருளாளராக தோழர் ராஜன் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
இறுதி நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்துவது குறித்தும் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த அடிப்படையில் முன்மாதிரியாகச் செயல்பட்டு பாசிசத்தை வீழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துகள்.
***
பாலி கிளை:
மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலியில் முதலாவது கிளை மாநாடு மார்ச் 22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக நெய்வேலி மக்கள் அதிகாரம் தோழர் குழந்தைவேல் அவர்களுக்கு மொளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசத்தை வீழ்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கிளையின் செயலாளராக தோழர் வினாயகம் பொறுப்பெடுத்துக் கொண்டார். கிளையின் துணைச் செயலாளராக தோழர் மணிபாலன் பொறுப்பெடுத்துக் கொண்டார். கிளையின் பொருளாளராக தோழர் பஞ்சநாதன் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
இறுதி நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்துவது குறித்தும் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த அடிப்படையில் முன்மாதிரியாகச் செயல்பட்டு பாசிசத்தை வீழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துகள்.
தோழர் வினாயகம்,
மக்கள் அதிகாரம்,
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
72001 12838
***
விருத்தாச்சலம் கிளை:
கடலூர் மண்டலம் விருத்தாச்சலம் கிளையின் இரண்டாவது மாநாடு கொடி ஏற்றத்துடன் பேர் உற்சாகத்துடன் மார்ச் 23 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. மறைந்த தோழர் குழந்தைவேல் நினைவாக அவரது பெயர் மாநாடு அரங்கத்திற்கு வைக்கப்பட்டது. பிறகு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பின்பு தோழர் குழந்தைவேல் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வரைவு அறிக்கை விரிவாக விவாதிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் கிளை செயலாளராக தோழர் அசோக் குமார், இணை செயலாளராக தோழர் முருகானந்தம், பொருளாளராக தோழர் அஜய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொறுப்பேற்றுக் கொண்ட தோழர்கள் பாசிசத்தை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றுக் கொண்டனர். உறுப்பினர்களும் உடன் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
தோழர் அசோக் குமார்,
நகரச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
விருதாச்சலம்.
94438 49915
***
கடலூர் கிளை:
கடலூர் கிளை இரண்டாவது மாநாடு 23.03.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு அரங்கத்திற்கு கிளைத் தோழர்கள் காலை 6 மணிக்கே வந்து கொடி கட்டுவது, நினைவு ஸ்தூபி அமைப்பது, தோரணம் பலூன் கட்டுவது போன்ற வேலைகளை உற்சாகத்துடன் செய்ய ஆரம்பித்தனர். பிறகு காலை 10:30 மணி அளவில் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரம் செங்கொடி ஏற்றப்பட்டு செங்கொடிக்கும் நினைவு ஸ்தூபிக்கும் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாநாட்டு அரங்கத்திற்கு நெய்வேலி பகுதியில் சமீபத்தில் இறந்த தோழர் குழந்தைவேல் நினைவரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மாநாட்டிற்கு தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
அரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக தோழர் குழந்தைவேலுவிற்கு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு மூன்றாண்டு அறிக்கை, கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள் பற்றி தலைமை குழு உறுப்பினர் தோழர் சாந்தகுமார் அவர்கள் விளக்கங்கள் கொடுத்த பிறகு அதன் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றது. கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள் மூன்றாண்டு அறிக்கையை கிளைத் தோழர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
- கடலூர் மாவட்டம் C.N.பாளையம் நடுவீரப்பட்டில் உள்ள தலித் மக்களுக்கு அரசு வழங்கிய 300 ஏக்கர் பஞ்சமி நிலம் இன்று ஆதிக்க சாதியினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்தவித தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் இல்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி செயல்பட்டுக் கொண்டு வருகிறது. எந்த ஒரு மேல் சிகிச்சைக்கும் மற்ற மருத்துவமனையைப் பரிந்துரை செய்வதையே ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போக்கினை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- திருப்பூருக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்று உடனடியாக ஆய்வு செய்து இதற்குத் தீர்வு காண வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.
- நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கெடிலம் ஆற்றில் கலக்கிறது. இந்நீரைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ஆலையின் கழிவுநீரை ஆலையிலேயே மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
- கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 80க்கும் மேற்பட்ட எஸ்.சி/எஸ்.டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்த வழக்குகளுக்கு இதுவரை எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.
- கடலூர் 32வது வார்டு குழந்தை காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளின் மேலே செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- கடலூர் கம்மியம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாகக் கிடப்பில் கிடக்கிறது. அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இறுதியாக கிளை செயலாளராக தோழர் சக்திவேல், இணைச் செயலாளராக தோழர் இராமலிங்கம், பொருளாளராக தோழர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக தோழர் ஜெயக்குமார், தோழர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தியாகிகளுக்கு வீர வணக்கத்தோடு மாநாடு இனிதே நிறைவேறியது.
தோழர் சக்திவேல்,
கிளைச் செயலாளர்,
கடலூர்.
***
சென்னை மாவட்டம்:
மக்கள் அதிகாரம் அமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை ஒட்டி 24.03.2025 அன்று சென்னை மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
மாநாட்டில் கூட்டத் தலைவர் மற்றும் பதிவாளர் தெரிவு செய்யப்பட்டு கூட்டம் தொடங்கியது.
எமது பகுதியின் மாவட்ட மாநாட்டை தோழர் பூர்ணிமா தலைமை தாங்கி நடத்தினார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு துவங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக மறைந்த தோழர் குழந்தைவேலுவிற்கு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்த நிகழ்வாக மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் தோழர்கள் அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்றுக் கொண்டனர். இறுதியில் மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக கொள்கை அறிக்கையை ஏற்றுக் கொண்டனர். அடுத்தபடியாக அமைப்பு விதி மீதான விவாதம் நடைபெற்று ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், எமது அமைப்பின் மூன்றாண்டு வேலை அறிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டது.
இந்த காலங்களில் பல முன்னுதாரணம் மிக்க பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்பது அனுபவமாக உள்ளது. அனைத்து தோழர்களாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாவட்ட அளவிலான பிரச்சினைகள் குறித்து கீழ்க்கண்டவை மாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
- எண்ணூர் பகுதியில் அதானியின் துறைமுக விரிவாக்கத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். - கரடிபுத்தூர் பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதை வன்மையாக இம்மாநாடு கண்டித்து போராடும் மக்களை ஆதரிக்கிறது. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக வேலை செய்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியாளராகவும், அனைத்து மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், அவர்களுக்கு தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.
- சென்னையில் உள்ள அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என முன்வைக்கிறது.
- மாவட்ட அளவில் மக்கள் மீதான அடக்குமுறை, உரிமை பறிப்பு, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட உறுதி அளிக்கிறது.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் அமிர்தா செயலாளராகவும், தோழர் வினோத் இணைச் செயலாளராகவும், தோழர் பிரியா பொருளாளராகவும் ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கி மாவட்ட மாநாடு வெற்றிகரமாக, உற்சாகத்துடன் நடத்தது.
தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்.
***
மதுரை மேற்கு மாவட்டம்:
26.03.2025 மக்கள் அதிகாரம் மதுரை மேற்கு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் சிறப்புப் பார்வையாளர்களாக மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியனும் தோழர் ரவியும் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற அரசியல் முழக்கமும், திருப்பரங்குன்றம் முருகன் – சிக்கந்தர் வழிபாட்டில் சிக்கலை ஏற்படுத்தி பிளவை ஏற்படுத்தி மக்களை மோதவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்க ”முருகனை மீட்போம்; கற்பனை காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களிடம் எடுத்துச் சென்று மத நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளிலும் தலையிடவும் உறுதி ஏற்கப்பட்டது.
இதில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராக தோழர் சிவகாமு தேர்வு செய்யப்பட்டார். இணைச் செயலாளராக தோழர் பரமன் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக தோழர் குருசாமி தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக தோழர் ஏடி கணேசன், தோழர் பாரதி, தோழர் ஆண்டவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram