மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு 26.03.2025 அன்று மாலை 5 மணிக்கு கொடி ஏற்றத்துடன் உற்சாகமாகத் தொடங்கியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இயக்க வேலையின் மூலமாக ஜனநாயக சக்திகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பாசிச எதிர்ப்பு அரசியலைக் கொண்டு சென்று அமைப்பை வளர்த்தெடுக்க பல்வேறு வேலைகளைச் செய்து தனி மாவட்டமாக அமைப்பை வளர்த்து எடுத்தது முன்னேற்றகரமான நமது அரசியலுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மைய தேர்தல் குழுவின் மூலம் மாநாடு நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து எமது பகுதி அமைப்பில் வர்க்க உணர்வுடன், அமைப்பு உணர்வுடன் இருந்து தான் மரணிக்கும் தருவாய் வரை கம்யூனிச உணர்வுடன் செயல்பட்டு வந்த தோழர் வேங்கடேசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்தபடியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கை மீதான விளக்கங்கள் விவாதங்கள் நடத்தப்பட்டது. இதில் எழுப்பப்பட்ட கேள்வி சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த நிகழ்வாக அமைப்பின் விதிகள் குறித்த விளக்கத்திற்குப் பிறகு விவாதங்கள் நடத்தப்பட்டது.

தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்ட பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மூன்றாண்டு அமைப்பு அறிக்கை முன்வைக்கப்பட்டு அதில் எழுந்த கேள்விகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதை ஒருவர் முன்மொழிந்தார். அதன் மீது மற்ற தோழர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்து இறுதியாக ஒரு மனதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இம்மாவட்ட மாநாட்டில் தோழர் சங்கர் செயலாளராகவும், தோழர் ஏழுமலை இணைச் செயலாளராகவும், தோழர் மோகன் பொருளாளராகவும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொறுப்பெடுத்துக் கொண்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தைக் கட்டியமைப்பதிலும், மக்கள் எழுச்சியை உருவாக்குவதிலும் முன் முயற்சியுடன் செயல்படுவோம் என உறுதி ஏற்றனர்.

பாசிச கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்கப் போராடுவோம் என மாநாடு உறுதி ஏற்றது.

இம்மாவட்ட மாநாட்டில் பகுதி அளவில் நடைபெறும் அரசியல் போராட்டங்கள் பகுதி அளவிலான பிரச்சனைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானங்கள்:

  1. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை ரத்து செய்வதோடு, விமான நிலையம் அமைப்பதை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனை இன்றி ரத்து செய்ய வேண்டும் என மாநாடு முன்வைக்கிறது.
  2. வளர்ச்சி என்ற பெயரில் மேல்மா சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு முன் வைக்கிறது.
  3. எமக்கு அருகாமையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கரந்தை கிராமத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்படும் கல்குவாரிகளை மூட வேண்டும் எனவும், கல்குவாரி அமைக்கப்பட்டதால் குடியிருப்புகளில் பல்வேறு பாதிப்புகள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை உரிய முறையில் சரி செய்து கொடுக்க வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.
  4. திருவண்ணாமலை மாவட்டம் அருங்குணம் கிராமத்தில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் மீது விஷம் தெளித்து அளித்த ஆதிக்கச் சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மாநாடு முன் வைக்கிறது.
  5. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதோடு மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலைகளிலும் சங்கம் வைக்கும் உரிமைக்காக எமது அமைப்பு தொடர்ந்து போராடும் துணை நிற்கும். சங்கம் வைத்ததற்காக தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாநாடு முன்வைக்கிறது.
  6. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பேருந்து நிலையம் அருகிலேயே உள்ள டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும். அதை எதிர்த்துப் போராடி வரும் மக்களுக்கு எப்பொழுதும் மக்கள் அதிகாரம் துணை நிற்கும்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

தோழமையுடன்,
தோழர் வ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
9786076201

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க