1990-களின் பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற நாசகரக் கொள்கையின் விளைவாக தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை வளர்ந்து, ரிசர்வ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் பெருகியுள்ளது. நவீனமயமாக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவாக இந்தியத் தொழிலாளர்களின் ஊதிய சராசரி தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ஐ.எல்.ஓ.) டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (ஐ.ஹெச்.டி.) இணைந்து வெளியிட்டுள்ள “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை” தெரிவித்துள்ளது.
இந்த புதிய நிலைமைகளில், மேலும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கும் தொழிலாளர்கள் மீது அடுத்தடுத்து வர இருக்கின்ற தாக்குதல்களுக்கும் பரந்த அடித்தளத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.
2002-ஆம் ஆண்டில் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றுதான் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு அல்லது ஐந்து சட்டங்களாக சுருக்குவதாகும். அன்றைக்கு பத்தாண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரசு அரசு அதனை நிறைவேற்றுவதில் மந்தப் போக்கைக் காட்டியது; மோடி தலைமையிலான அரசுதான், இதில் தீவிரம் காட்டியிருக்கிறது என்று தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மெச்சிக்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறை, கிக் வேலைமுறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அதிகரித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஆகப் பெரும்பான்மையினர், தங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற அவலநிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவது இயல்பானதே. ஆனால், பழைய 44 சட்டங்களைப் போல தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்பான சட்டங்கள் அல்ல, புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்.
நூலின் பெயர்: 2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும்
முதற்பதிப்பு: ஜனவரி 2025
வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049
தொலைபேசி எண்: 97915 59223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com
அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24
விலை: ரூ. 130

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram