சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்

நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223

சூழலியல் நெருக்கடி, சூழலியல் சீர்கேடுகள் குறித்து தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் வெளிவந்துள்ள நூல்கள் மிக அரிதே .அந்த வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ,விடியல் பதிப்பகம் கொண்டுவந்த “மார்க்சும் சூழலியலும்” என்ற நூல் மிகவும் முக்கியமானது. ஏறக்குறைய அதற்குப் பிறகு சூழலியல் பிரச்சினையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் கையாளும் வகையில் வெளி வருகின்ற ஒரே நூல் “சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்” என்ற இந்த நூலகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரையான “சூழலியல் நெருக்கடி: ஏகாதிபத்தியக் கட்டமைப்பைத் தகர்த்து சோசலிசத்தை நிறுவுவதே தீர்வு”, சூழலியல் நெருக்கடியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்குகிறது.

முதலாளித்து உற்பத்தி முறைதான் இயற்கையிலிருந்து பிரிந்த பொருளுற்பத்திக்கு அடிப்படையானதாகும். இதுதான் சூழலியல் நெருக்கடியின் ஊற்றுக்கண்ணாகும்.

அந்த வகையில், சமகால சுற்றுச்சூழல் நெருக்கடியைப் புரிந்து கொள்ளவும் இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மனித குலத்தை பாதுகாக்கவுமான அடிப்படையை இக்கட்டுரை விளக்குகிறது.

இத்துடன் சூழலில் நெருக்கடி தொடர்பாக சமகால நிகழ்வுகள் சிலவற்றையொட்டி புதிய ஜனநாயகம் இதழிலும் வினவு இணையதளத்திலும் வெளிவந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக நெருக்கடிக்கு காரணமான முதலாளித்துவமும் அதன் அரசுகளும் மக்களை பாதுகாப்பதில் சிறிதும் பொறுப்பும் அக்கறையும் இன்றி இருப்பதை இந்த கட்டுரைகள் விளக்குகின்றன.

சூழலியல் நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தாமே சுமக்க வேண்டிய நிர்கதியான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதையும் இக்கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளின் தலைமையில் நடைபெறும் சி.ஓ.பி எனப்படும் “கிளாஸ்கோ பருவநிலை மாநாடு” என்ற ஏகாதிபத்திய அரட்டை மடத்தின் உண்மை முகத்தை இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.

முதலாளித்துவத்தாலும் சூழலியல் நெருக்கடிக்குக் காரணமான ஏகாதிபத்தியங்களாலும் அவற்றின் அடிவருடி அரசுகளாலும் எந்தவகையிலும் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வைத் தரமுடியாது. சோசலிசத்தாலும் அதனால் வழிநடத்தப்படுகின்ற உழைக்கும் மக்கள் அரசுகளாலும்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது.

சூழலியல் நெருக்கடிக்கு எதிராகவும் இயற்கையைப் பாதுகாப்பதற்காகவும் போராடுபவர்களுக்கு இந்நூல் சிறந்த தொடக்கநிலை நூலாக அமையும்.

நூலின் பெயர்: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள்

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049

தொலைபேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை: ரூ. 100

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க