28.03.2025

வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நேற்று (27.03.2025) மாலை நான்கு மணி அளவில் முதலாவது மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு தொடங்கியது.

மாநாட்டுக்கு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் மாநாடு ஆரம்பமானது. அதன் பிறகு தோழர் சம்மனசு மற்றும் குழந்தைவேல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதிய கொள்கை அறிக்கை குறித்து மக்கள் அதிகாரம் தலைமை குழு உறுப்பினர் தோழர் சாந்தகுமார் விளக்கினார். அதன் பிறகு விவாதங்கள் நடந்து கொள்கை அறிக்கை குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் அமைப்பு விதிகள் பொறுப்பாளரின் கடமைகள் உறுப்பினர் கடமைகள் என அனைத்தையும் விவரித்தார்.

இது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அமைப்பின் மூன்றாம் ஆண்டு அறிக்கைகள் மற்றும் நிதி சம்பந்தமான அறிக்கைகள் விவாதிக்கப்பட்டது. அதன் மீதான தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது.

அடுத்ததாக மாவட்ட அளவில் உள்ள பிரச்சனைகள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அனைத்தும் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்களாக வாசிக்கப்பட்டது. அதை அனைத்து உறுப்பினர்களும் வரவேற்று கரவொலி எழுப்பினர்.

இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கிழக்கு மாவட்டச் செயலாளராக தோழர் பிரகாஷ், இணைச் செயலாளராக தோழர் ரவி, பொருளாளராக தோழர் விஜி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதன் பிறகு புதிய நிர்வாகிகளுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் மற்றும் கவுன்சிலர் முத்துராமலிங்கம் ஆகியோரும் தங்களது வாழ்த்துரையை பதிவு செய்தனர்.

இறுதி நிகழ்வாக புதிய கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் பிரகாஷ் ஏற்புரை வழங்கினார்.

அதன் பிறகு இணைச் செயலாளர் தோழர் ரவி நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் அதிகாரத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான லோகோவை மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தேர்ந்தெடுத்து வெளியிட்டார்.

சிறப்பான ஏற்பாடுகளுடன் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த மாநாட்டிற்கு மக்கள் கலை இலக்கிய கழக கழகத்தின் தோழர்களும் சுற்று வட்டார ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான உறுதிமொழி ஒவ்வொரு தோழரின் மனதிலும் பதிந்து மாநாடு முடிவடைந்தது.

மாநாட்டுத் தீர்மானங்கள்:

  1. டங்ஸ்டன் போன்ற அபாயகர திட்டங்களை எதிர்த்து முறியடித்த அரிட்டாப்பட்டி வெள்ளாளப்பட்டி மற்றும் மேலூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் வீரியமிக்க போராட்டத்திற்கு இந்த மாநாடு வாழ்த்துகளை தெரிவிக்கிறது. இனிவரும் காலங்களிலும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இதுபோன்ற அபாயகரத் திட்டங்களை எதிர்த்து முறியடிக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.
  2. திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலின் சதித்தனத்தை முறியடிக்க தொடர்ந்து களத்தில் நிற்பது என இந்த மாநாடு உறுதியேற்கிறது.
  3. மதுரை தெற்கு தெருவிற்கு அருகில் உள்ள செம்பூர் கிராமத்தில் புதிய சிறைச்சாலை கட்ட அறிவிப்பு விட்டு நில அளவெடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் மேய்ச்சல் நிலங்கள். அதனால் மக்களினுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் விதமாக அமைந்துள்ள இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.
  4. கருங்காலக்குடி அருகில் கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பகுதி தொல்லியல் சின்னங்கள் நிறைந்தது. மேய்ச்சல் விவசாயம் என மக்கள் சொந்தமாக பிழைத்து வருவதை ஒழித்துக் கட்ட வரும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என இந்த மாநாடு அறை கூவுகிறது.
  5. கீழடி அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்ட முடிவுகளை வெளியிடாத ஒன்றிய பாஜக அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை தொடர்ந்து வெளியிடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரலாற்றை புறக்கணிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்க அனைவரையும் அறைக்கூவி அழைக்கிறது இந்த மாநாடு.
  6. இராமநாதபுரம் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள கடற்கரை ஓரம் முழுவதும் எண்ணெய் மட்டும் இயற்கை எரிவாயுக்கள் எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ள ஒன்றிய பா.ஜ.க அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளத்தையும் அழிக்கும் இத்தகைய திட்டங்களை உடனடியாக கைவிடும் படி இம்மாநாடு கோருகிறது. அம்பானி அதானிகளின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை முறியடிக்க தொடர்ந்து போராடுவதற்கும் இம் மாநாடு உறுதியேற்கிறது.
  7. இலங்கை அரசால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை வன்மையாக கண்டிக்கிறது. மீனவர்களுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்திய ஒன்றிய பா.ஜ.க அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
    மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க இம்மாநாடு அறைக்கூவி அழைக்கிறது.
  8. மானாமதுரை மேலப்பிடாவூர் கிராமத்தில் புல்லட் ஓட்டியதற்காக தாழ்த்தப்பட்ட மாணவன் கை வெட்டப்பட்டதற்கு இம்மாநாடு கண்டனங்களைத் தெரிவிக்கிறது. ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்யவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. சாதி வெறியை தூண்டிவிடும் சாதி சங்கங்களுக்கு அடிக்கொல்லியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை தடை செய்யவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
  9. மதுரை மாநகராட்சியில் ஆடு, கோழி, நாய், பூனை வளர்ப்பதற்கு விதிக்கப்பட்ட வரியை உடனடியாக ரத்து செய்யும்படி இம்மாநாடு கோருகிறது. இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கவும் இம்மாநாடு உறுதியேற்கிறது.
  10. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எவர்சில்வர் பட்டறைகள், சிறு குறு தொழில்கள் ஏராளமாக உள்ளன. ஒன்றிய அரசின் அராஜகமான ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இது போன்ற தொழில்கள் அழிந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் உடனடியாக ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய இம்மாநாடு கோருகிறது.
  11. மதுரை ஒத்தக்கடை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனை இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் அளவிற்கு தான் உள்ளது. ஒத்தக்கடை சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பெரிய மருத்துவமனை அமைக்க இம்மாநாடு கோரிக்கை விடுக்கிறது. இதற்காக தொடர்ந்து களத்தில் போராடுவது எனவும் இந்த மாநாடு உறுதியேற்கிறது.
  12. மதுரை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளிலும் ரோடுகளில் சுற்றி தெரியும் மாடுகளால் நாய்களால் பெரிதும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஆகின்றது. ஆதலால் இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தை மாநாடு வலியுறுத்துகிறது.
  13. மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டு குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யுமாறும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
  14. மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி இம்மாநாடு கோருகிறது. இது போன்ற திட்டங்களால் மதுரை மக்களின் தண்ணீர் உரிமையை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் சதியை முறியடிக்க வருமாறு இம்மாநாடு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.
  15. வாடிப்பட்டி கச்சை கட்டி பகுதியில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. கல்குவாரி முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.


மதுரை கிழக்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க