அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டும் என ஏதோ ஒரு வகையில் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் களப்போராளிகளே, உங்கள் அனைவருக்கும் எமது மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒட்டுமொத்த மக்களும் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறோம்.
குறிப்பாக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தலித்துகள் பெண்கள் மீதான அடக்குமுறை என்பது நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.
பல இடங்களில் சாதிய மோதல்கள், மத மோதல்களை ஏற்படுத்தி கலவர பூமியாக மாற்ற துடித்து வருகிறது அந்த பாசிச கும்பல்.
பாசிச கும்பல் தான் காலூன்ற முடியாத கோட்டையாக இருந்த தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாதிய சங்கங்களில், கோவில் நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை நுழைத்து தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கல்லரையாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
அந்த வகையில் “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசம் ஒழிக! வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம், அரங்கக் கூட்டம் ஆகியவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.
மக்களை திரட்டி போராட்டங்களை கட்டி அமைப்பது, மக்களின் எழுச்சியை உருவாக்கி தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, நான்கு கம்பம் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நடைபெறும் இந்த தெருமுனைக் கூட்டம் 07.04.2025 மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும்,பாசத்தை முறியடிக்க வேண்டும் என விரும்பும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
***
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
2026 சட்டமன்ற தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்
தெருமுனைக் கூட்டம்
நாள்: 07.04.2025, திங்கள் கிழமை | நேரம்: மாலை 4.30,
இடம்: நான்கு கம்பம் அருகில், பேர்ணாம்பட்டு.
”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.
தலைமை:
தோழர் C.பட்டாபி,
பு.ஜ.தொ.மு,
வேலூர்.
அறிமுக உரை:
தோழர் சுந்தர்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
பு.ஜ.தொ.மு.
உரையாற்றுவோர்:
D.கிருஷ்ணன்,
தமிழ்நாடு விவசாயி சங்கம்.
வழக்கறிஞர் தோழர் சிவா,
மாவட்ட செயலாளர்,
தி.வி.க.
தோழர் சரோஜா,
மாவட்ட செயலாளர்,
CPI-ML.
ஆலியார் சுல்தான்,
மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் மொக்தியார்,
மாவட்ட தலைவர்,
SDPI.
தோழர் பரசுராமன்,
பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம்.
தோழர் க.ப.மறைமலை,
மண்டல துணை செயலாளர்,
வி.சி.க.
சிறப்புரை:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
நன்றியுரை:
தோழர் V.சாந்தகுமார்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்,
வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்
8489735841

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram