08.04.2025
ஆளுநர் இரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!
இரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்!
பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டின் ஆளுநர் என்றும் தன்னைத்தானே பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் மீது எவ்விதமான முடிவையும் எடுக்காமல் நிறுத்தி வைப்பதற்கும், மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறுத்திவைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் ஆளுநர் உரிமையற்றவர் என்பதை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு வழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
பாசிச மோடி அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு என்றே தயார் செய்யப்பட்ட பாசிச உளவாளிகளை ஆளுநராக நியமித்தது.
தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் இரவியின் செயல்பாடுகளை தொடக்கத்திலேயே கண்டறிந்த மக்கள் அதிகாரம், அவரை பாசிச உளவாளி என்று மிகச் சரியாக வரையறுத்தது.
மேலும் இரவியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மிக முக்கியமான இயக்கத்தையும் முன்னெடுத்தது.
பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததன் காரணமாக, இனி தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருப்பார்.
இது நாள் வரை பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல், லஞ்ச -லாவண்ய – முறைகேடுகள், அதிகாரத்துமீறல், திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகள் ஆகியவை தடுக்கப்படாமலேயே இருந்தன. குறிப்பாக சேலம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரும் பதிவாளரும் ஊழலிலும் ஆர்.எஸ்.எஸ்.வெறியிலும் திளைத்து இருப்பதை தடுக்க முடியாமல் இருந்தது.
இத்தீர்ப்பின் மூலம் ஆளுநர் இரவியின் செயல்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram