முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | பிரச்சாரப் பயணம் | துண்டறிக்கை

பிரச்சாரப் பயணம் | ஏப்ரல் - மே 2025

ஜல்லிக்கட்டையும், அரிட்டாபட்டியையும் மீட்டோம்!

முருகனை மீட்போம்!
கருப்பனைக் காப்போம்!

இந்து முன்னணி – பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!

பிரச்சாரப் பயணம் | ஏப்ரல் – மே 2025

  • முஸ்லிம்களுக்கு சிக்கந்தர் மலை
    சமணர்களுக்கு சமண மலை
    மதுரை மக்களுக்கு
    கருப்பசாமி மலை, முருகன் மலை
    இந்த எல்லா மலையும் திருப்பரங்குன்றம் மலை!
  • அரிட்டாபட்டியை அகர்வாலுக்கு கொடுக்க
    முயற்சித்த அண்ணாமலை
    திருப்பரங்குன்றம் மலையை
    மார்வாடி சேட்டுகளுக்கு
    கொடுக்கும் சதியை முறியடிப்போம்!
  • முருகனும் கருப்பனும் எங்கள் சாமி!
    ஆடு கோழி வெட்டுவது எங்கள் [தமிழர்] மரபு!
  • தமிழர் மரபு
    வெற்றிவேல், வீரவேல்!
    அது மதுரைக்காரன் மரபு!
    ஆடு, கோழி வெட்டக்கூடாது எனும்
    இந்து முன்னணிக்கு
    மதுரைக்குள் என்ன வேலை?
  • ஊரைக் கெடுப்பவனை ஊருக்குள் விடாதே!
    இந்து முன்னணியை
    திருப்பரங்குன்றத்தில் விடாதே!
  • சிக்கந்தர் மலை என்ற பெயர்
    பிற்காலத்தில் வந்தது என்று
    பழங்கதை குப்பைகளைக் கிளறி
    மதவெறுப்பை விதைக்கிற
    இந்து முன்னணியை ஊருக்குள் விடாதே!
  • இன்று திருப்பரங்குன்றத்தில்
    ஆடு, கோழி வெட்டக்கூடாது எனும்
    இந்து முன்னணி, பி.ஜே.பி
    நாளை தமிழ்நாட்டில்
    அசைவ உணவு தடைசெய்யக் கோருவான்,
    எச்சரிக்கை!
  • மதுரைக்காரனை முட்டாள் என்று சொன்ன
    இராம. சீனிவாசனை கைது செய்!
  • திருப்பரங்குன்றத்தின் மதநல்லிணக்கத்தை கெடுத்து
    ஆடு கோழி பலியிடுவதை தடுத்த
    இன்ஸ்பெக்டர் ‘மதுரை வீரனை’
    கைது செய்! தண்டனை வழங்கு!
  • ஈரோடு இடைத்தேர்தலுக்கு அமைச்சர்கள்
    புடைசூழ ஓட்டுவேட்டையாடிய திமுக அரசே!
    மதுரையை ஆக்கிரமிக்க
    மார்வாடியும் சேட்டும்
    இந்து முன்னணி வானரப்படையுடன் வருகிறான்!
    உமது அமைச்சர் படை எங்கே?
  • ஜல்லிக்கட்டு மட்டும் தமிழரின் வீரமல்ல!
    அரிவாள் ஏந்திய அய்யனாரும்,
    வேல்கம்பு ஏந்திய முருகனும்
    தமிழர் வீரத்தின் அடையாளம்!
    அதை அண்ணாமலைக்கும்
    இந்து முன்னணிக்கும் புரியவைப்போம்!
  • இந்தி திணிப்புக்கு எதிரான போருக்கு
    அடித்தளமிட்ட மதுரையை
    மார்வாடி, அகர்வாலுக்கு
    அடகுவைக்க முயற்சிக்கும்
    அண்ணாமலையின் சதியை முறியடிப்போம்!
  • அப்பனுக்கு புத்தி சொன்ன முருகனும்
    சிவனையே சுட்டெரித்த நக்கீரரும்
    கருப்பனும் சிக்கந்தரும்
    ஒன்றாக வீற்றிருக்கும் மலை,
    திருப்பரங்குன்றம் மலை!
    அதை மார்வாடிகளும் சேட்டுகளும்
    ஆக்கிரமிக்க அனுமதியோம்!
  • மதுரை மக்களே!
    முருகனுக்கும் கருப்பனுக்கும்
    ஆடு, கோழி பலியிட்டு வணங்குவது
    தமிழ் மக்களின் மரபு!
    அதனை தடுப்பதற்கு நடக்கும்
    முயற்சிகளை முறியடிப்போம்!

ம.க.இ.க | பு.மா.இ.மு | மக்கள் அதிகாரம்
மதுரை மாவட்டம்

தொடர்புக்கு: 97916 53200, 78268 47268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க