அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

க்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாடு 2022 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த மூன்றாண்டுகளில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா தலைமையிலான பார்ப்பனிய-கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராக எமது அமைப்பு தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றது; எமது அமைப்பும் விரிவடைந்தது.

இந்த மூன்றாண்டு அனுபவங்களிலிருருந்து எமது அமைப்பின் கொள்கை அறிக்கையை செழுமைப்படுத்தியும் புதிய தோழர்களை தலைமைக்குக் கொண்டுவரும் வகையிலும் எமது அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

புதிய கொள்கை அறிக்கையையும் அமைப்பு விதிகளையும் வகுத்தளித்த இந்த மாநாட்டில் எமது அமைப்பானது, மக்கள் அதிகாரக் கழகம் என்ற பெயர் மாற்றத்துடன் ஓர் அரசியல் கட்சியாக தன்னை கட்டமைப்பு மாற்றம் செய்து கொண்டு பாசிசத்திற்கெதிராக மக்களைத் திரட்டிச் செயல்பட உறுதியேற்றது. புதிய செயற்குழுவும் தலைமைக் குழுவும் இம்மாநாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மான விளக்கக் கருத்தரங்கில் பல்வேறு ஜனநாயக சக்திகள் பங்கேற்று வாழ்த்துகளை வழங்கினர்.

இம்மாநாட்டின் தீர்மானங்கள்

21. இந்தியளவில் பாசிச எதிர்ப்பில் முன்னணியிலிருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்டு ஐந்து மாநிலங்களுக்கான 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை வீழ்த்துவதற்கான பொதுத் திட்டத்தை முன்வைத்து செயல்படுவதன் மூலம் மட்டுமே பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த முடியும். மாறாக, சாதிய, மதவாத அமைப்புகளுடன் கூட்டு வைத்துக்கொண்டும், லஞ்ச-லாவணியங்களில் செழித்துக்கொண்டும், கார்ப்பரேட் திட்டங்களை தீவிரமாக அமல்படுத்திக்கொண்டும் இப்பாசிசக் கும்பலை வீழ்த்த ஒருபோதும் முடியாது என்று இம்மாநாடு தீர்க்கமாக முன்னுரைக்கிறது.

22. ஆரிய-வேத-வர்ண-பேத ஒடுக்குமுறைக்களுக்கு எதிராக ஈராயிரமாண்டுகளுக்கு மேலாக இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரான மரண அடியை தமிழ்நாடு கொடுக்கும் என்பதையும் தமிழ்நாட்டின் சாதி எதிர்ப்பு – சமத்துவ பண்பாட்டை மக்கள் அதிகாரக் கழகம் உயர்த்தி பிடிக்கும் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

23. முல்லைப் பெரியாறு, காவிரி டெல்டாவில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் எரிவாயு அகழ்வு, பாலாறு குறுக்கே அணை கட்டுதல், கூடங்குளம் அணு மின் நிலையம், அணுக்கழிவு மையம், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள், அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் – என தமிழ்நாட்டின் – தமிழ்த்தேசிய இனத்தின் மீதான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் தாக்குதலுக்கு எதிராக தமிழ்நாடு ஒருங்கிணைந்து ஒருமுகமாக போராட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

24. தற்போது, தமிழ்நாட்டில் ஆட்சிசெய்து வரும் தி.மு.க அரசு பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், டிஜிட்டல் மீட்டர், சாம்சங் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாகவும் அராஜகமாகவும் மேற்கொண்டு வருகிறது. தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத போக்கைக் கண்டித்து மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இச்சூழலைப் பயன்படுத்தி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.க அடிமை அ.தி.மு.க-வை பயன்படுத்தி தமிழ்நாட்டைக் கைப்பற்ற எத்தனிக்கிறது. அதேசமயம், த.வெ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளால் ஏற்படப்போகும் ஓட்டுச் சிதறல் பாசிச பா.ஜ.க.வுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்நிலையில், தி.மு.க அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், பா.ஜ.க-வுடனான மறைமுகக் கூட்டு ஆகியவை தமிழ்நாட்டு அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், “2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்து வருகிறது. எனவே, இவ்வியக்கத்தை தமிழ்நாடு மக்களும், ஜனநாயக சக்திகளும் ஆதரித்து இணைந்து செயல்படும்படி இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

25. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது, திருவண்ணாமலை-செய்யாறு, மதுரை-கல்லாங்காடு போன்ற பகுதிகளில் சிப்காட் அமைப்பது, மதுரை-சின்ன உடைப்பு பகுதியில் விமான விரிக்காத்திற்கு விவாய நிலங்கள், வீடுகளை ஆக்கிரமிப்பது, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், நகாராட்சி – மாநகராட்சி விரிவாக்கம் போன்ற கார்ப்பரேட் கொள்ளைத் திட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இத்திட்டங்களை எதிர்த்து போராடிவரும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

26. தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பொய்யான பரப்புரைகள், கலவர முயற்சிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இப்பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக போலீசு துறையில் நிரம்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பலை பணி நீக்கம் செய்ய வேண்டும் இன்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

27. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது ஊபா கருப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம், பொய் வழக்குகள் போடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராகவும், அடிப்படை வசதிகள் – உரிமைகள் கோரிப் போராடுபவர்கள் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் தாக்குதலுக்குள்ளாகுவதும் அதிகரித்துள்ளன. இத்தாக்குதல்களில் ஈடுபடும் கிரிமினல் கும்பல், இக்கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க