ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதற்காக பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி-யைச் சேர்ந்த காவிக் குண்டர் படையைச் சேர்ந்த கும்பல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றுள்ளது

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில், உள்ள தனியார் மண்டபத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி நடந்து கொண்டிருந்த கூட்டம் ஒன்றில் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பிக்கொண்டு காவி கும்பல் நுழையும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த 20-ஆம் தேதி அகமதாபாத் மாவட்டத்தின் விமல்பார்க் சொசைட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஈஸ்டர் தினத்தையொட்டி பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட நூறு பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விஸ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய காவிக் குண்டர் படைகளைச் சார்ந்த மதவெறி கும்பல் ஒன்று கைகளில் இரும்பு கம்பி மற்றும் கட்டைகளுடன் உள்ளே நுழைந்துள்ளது. “ஜெய் ஸ்ரீ ராம்“, “ஹர் ஹர் மகாதேவ்“ என்று கோஷம் போட்ட அக்கும்பலால் அங்கிருந்த பெண்களும் சிறுவர்களும் அச்சமடைந்தனர். கூட்டத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு காவிக் கும்பல் மிரட்டியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ஒதவ் பகுதி போலீசு காவிக் குண்டர்களுடன், கூட்டத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

அங்கு பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தர்ஷன் ஜோஷி என்பவன், அக்கூட்டத்தில் “கட்டாய மதமாற்றம்“ நடந்துள்ளது என கிறிஸ்தவர்கள் மீது புகார் அளித்துள்ளான். ஆனால், முதற்கட்ட விசாரணையின்போது மத மாற்றத்திற்கான எந்த அறிகுறியையும் தாங்கள் கண்டறியவில்லை என்று இன்ஸ்பெக்டர் ஜின்சுவாடியா தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தேவாலயத்தை முற்றுகையிட்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அடையாளம் தெரியாத 15 நபர்கள் மீது பிரார்த்தனை கூட்டத்திலிருந்த இமானுவேல் அமய்தாஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.


படிக்க: இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்


இதிலிருந்தே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதற்காக பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி-யைச் சேர்ந்த காவிக் குண்டர் படையைச் சேர்ந்த கும்பல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றுள்ளது என்பது தெளிவாகிறது.

ஆனால், “நாங்கள் இரு தரப்பினரிடமிருந்தும் புகார்களைப் பெற்று, வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று இன்ஸ்பெக்டர் ஜின்சுவாடியா தெரிவித்துள்ளார். அப்பட்டமாக அதிகார வர்க்கம் காவிக் கும்பலின் அட்டூழியத்திற்குத் துணை நிற்கிறது என்பதையே இது காட்டுகிறது.

மோடி தலைமையிலான பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

ராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துப் பண்டிகை பயன்படுத்தி காவிக் கும்பல் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இயல்பாக மாற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் ரமலான் மற்றும் ஈஸ்டர் போன்ற சிறுபான்மையின மக்களின் பண்டிகை நாட்களிலும் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டும் 834 தாக்குதல் பதிவாகியுள்ளதாக “ஐக்கிய கிறிஸ்தவர் மன்றம்” தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாசிசக் கும்பலுக்கு எதிராக அணிதிரள வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கலவரக் காடாக மாறுவதற்குமுன் நாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலைத் தடை செய்வதன் மூலமே இதுபோன்ற கலவரங்களிலிருந்தும், மத-சாதி-இன வெறி தாக்குதல்களிலிருந்தும் நாம் விடுபட முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க