லெனின் 155 | செய்தி – புகைப்படம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

***

கடலூர்:

ஏப்ரல் 22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 155வது பிறந்த நாள்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!

பாசிசத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க உறுதியேற்போம்!

என்ற வகையில் கடலூர் மண்டலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் தோழர் லெனின் பிறந்த நாளை முன்னிட்டு தோழர் வினாயகம் தலைமையில் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பகுதி தோழர் பஞ்சநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

***

பு.ஜ.தொ.மு:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்புச் சங்கமான டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஏப்ரல் 22, பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாளை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் மு. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை தொழிலாளி வர்க்கம் உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல் அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாளை உலகமே கொண்டாடி வருகிறது. பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி ரஷ்யாவில் ஒரு சோசலிச புரட்சியை நடத்திக் காட்டி அழுக்குச் சட்டையும் அரசாள முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர் தோழர் லெனின். இன்று வரை உலக பாட்டாளி வர்க்கத்தின் விடிவெள்ளியாகத் திகழ்கிறார்.

இந்தியாவில் மோடி அரசோ தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் – இப்படி எல்லா தரப்பட்ட மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பறித்து வருகின்றது. கனிம வளங்களையும் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் கும்பலுக்கு பலியிடுகிறது. மக்களைச் சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது. இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம் வாருங்கள் தோழர்களே என்று தனது உரையை நிறைவு செய்தார்.

சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர். S. சண்முகம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இடையிடையே முழக்கங்கள் எழுப்பப்பட்டது அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

***

மதுரை மேற்கு:

ம.க.இ.க:

***

திருவாரூர்:

ஏப்ரல் 22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 155வது பிறந்த நாள்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!

பாசிசத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க உறுதியேற்போம்!

என்ற வகையில் திருவாரூர் மாவட்டம் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் அம்மையப்பன் கிராமத்தில் தோழர் லெனின் பிறந்த நாளை முன்னிட்டு தோழர் ஆசாத் தலைமையில் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பகுதி தோழர் பொருளாளர் முரளி, மாவட்ட இணை செயலாளர் லெனின், செயற்குழு உறுப்பினர்கள் குமரகுரு, சூரிய பிரகாஷ், தோழர் அஜித் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

***

நெல்லை:

***

கிருஷ்ணகிரி:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க