30.04.2025

பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!

இயற்கை வளக் கொள்ளைக்கு எதிரான
பழங்குடி மக்களின் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகை செய்தி

த்திய இந்தியாவின் தண்டகாரன்யா (மகாராட்டிரம், தெலுங்கானா, சட்டீஸ்கர் – பஸ்தர்) பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு தாரை வார்ப்பதற்காக பழங்குடியின மக்கள் மீது பல ஆண்டுகளாக போரை தீவிரமாக நடத்தி வருகிறது பாசிச மோடி அரசு.

பஸ்தர் பகுதி முழுவதும் 230க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்களை அமைத்து பழங்குடியின மக்களையும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டு கட்சியினரையும் முற்றுகையிட்டுள்ளது இராணுவம்.

பழங்குடியினரின் எண்ணிக்கையை விட பல மடங்கில் ராணுவத் துருப்புகளை நிறுத்தி ஈழத்தில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் படுகொலையை போன்ற படுகொலையை நிகழ்த்துவதற்கு தயாராக இருக்கிறது இராணுவம்.

“நக்சல் இல்லாத இந்தியா” என்று அறிவித்த அமித்ஷாவின் இந்த பாசிச நடவடிக்கைகளால் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினரும் மாவோயிஸ்ட் கட்சியினரும் படுகொலை செய்யப்பட்டனர்.

பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி – அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒன்றிய அரசு, தண்டகாரன்யா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து ஆயுதப் படைகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் ஆப்ரேஷன் ககரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க