சந்துரு
அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!
கடந்த 2021 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 505 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 2022-ல் இத்தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ம.பி: பெண்கள், குழந்தைகளுக்கான ரேஷன் வினியோக திட்டத்தில் மாபெரும் ஊழல்!
லாரியில் எடுத்து சென்றதாக கணக்கு காட்டி சிறிய வாகனங்களில் குறைவாக வினியோகம் செய்து மத்தியப்பிரதேச மாநில பெண்கள் - குழந்தைகளின் வயிற்றில் அடித்துள்ளனர் ம.பி ரேஷன் துறை அதிகாரிகள் - அமைச்சர்கள்.
ம.பி: சிறார் காப்பங்களின் உணவில் முட்டை, இறைச்சியை நிறுத்தும் பாஜக அரசு!
சிறார்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நிறுத்துவதன் மூலம் தனது இந்துராஷ்டிரக் கொள்கைக்காக சிறார் காப்பகங்களில் திணிக்கிறது பாஜக அரசு.
தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!
கேஸ் விலை உயர்வை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியின் புகைப்படத்தை பற்றி கவலைப்படுகிறார் நிம்மி மேடம்.
ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!
இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது.
ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!
ஆதிவாசி பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த சீமா பத்ரா பாரதிய ஜனதா கட்சியின் பிரமூகர். பாஜக ஓர் குற்றவாளிகளின் கூடாரம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
பீமா கோரேகான் வழக்கு: தலோஜா சிறையில் ஒடுக்கப்படும் கவுதம் நவ்லகா!
கவுதம் நவ்லாக உட்பட சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசிடமிருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!
மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்கான போராடும் போராளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகின்றார்கள்.
இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!
விவசாயிகளின் இடுபொருள் செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதானி குழுமத்தின் கொள்முதல் விகிதங்கள் குறைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்
மகாராஷ்டிரா: 137 விவசாயிகள் தற்கொலை – கண்டுகொள்ளாத அரசு!
விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்துவரும் காவி-கார்ப்பரேட் பாசிச கொடுங்கரங்களை தகர்க்க தொழிலாளர்கள்-விவசாயிகள்-மாணவர்கள்-இளைஞர்கள்-உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்.
பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலை!
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்தபோது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!
பலமுறை நிரந்தர மருத்துவ ஜாமீன் கேட்டும் ராவிற்கு பினை மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 83 வயது நிறைந்த முதியவரின் கடுமையான போராட்டத்தின் விளைவே மருத்துவ ஜாமீன் கிடைக்க காரணம்.
ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!
அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.
சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் கொடுஞ்சிறைகள்!
பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!
ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.