Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
705 பதிவுகள் 1 மறுமொழிகள்

உருவானது மக்கள் அதிகாரக் கழகம்! | வெற்றிகரமாக நடந்தேறிய மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு

மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பானது, இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் அடைந்துள்ளது என்பதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!

பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் இரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!

ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | கோவை

31.03.2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 30-03-2025, ஞாயிறு அன்று கோவை மக்கள் அதிகாரத்தின் 2-வது மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. மாநாட்டுக்கு தோழர் சங்கர் தலைமை தாங்கினார். இம்மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து...

சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | கடலூர்

30.03.2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இன்று (30.03.2025) காலை 10 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றப்பட்டது. பின்பு தியாகிகளுக்கு...

மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | திருவாரூர்

30.03.2025 சிறப்பாக நடைபெற்ற 2வது மாவட்ட மாநாடு! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (30 /03/25) மதியம் 3 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட கிளை மாநாடு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் சிறப்பாக நடைபெற்று...

கிருஷ்ணகிரி: பொம்மசமுத்திரம் தலித் மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!

சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | திருநெல்வேலி – தூத்துக்குடி

29.03.2025 சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (28.03.2025) காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு (திருநெல்வேலி - தூத்துக்குடி) தூத்துக்குடி தாளமுத்துநகரில்...

மக்கள் அதிகாரம் | முதலாவது மாவட்ட மாநாடு | கிருஷ்ணகிரி

29.03.2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரத்தின் முதல் மாவட்ட...

வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!

28.03.2025 வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27.03.2025) மாலை நான்கு மணி அளவில் முதலாவது மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு தோழர் பிரகாஷ் தலைமை...

பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!

பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!

இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.

நாக்பூர் கலவரம்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பாசிச கும்பலின் சதி

1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம்  விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!

எனினும் மக்கள் எதிர்ப்பை மீறி 12.03.2025 அன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.