மக்கள் அதிகாரம்
கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!
ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.
மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க டெண்டர் – தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!
தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நோக்கம்.
தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!
சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.
அமெரிக்காவின் அடிமை; ஆனந்த விகடனுக்கு அரசனா?
அமெரிக்காவின் அடிமையாக கெஞ்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆனந்த விகடனுக்கு அரசனாக இருந்து தடை விதித்து இருக்கிறார்.
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - இந்து முன்னணி கும்பல்.
இராம. சீனிவாசனை கைது செய் | இந்து முன்னணியின் பாடலை தடை செய்
ஜனநாயக சக்திகள் மனு || நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை
கிருஷ்ணகிரி: எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை! அரசே முதன்மைக் குற்றவாளி!
ஒரு ஆசிரியரால் குடித்துவிட்டு சர்வசாதாரணமாக பள்ளிக்கு வரமுடிகிறது, இன்னொருவன் ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்தவன் என்றாலும், அவன் மீண்டும் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது என்றால், மாணவிகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக இருக்கிறது..
உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!
இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்.
வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்கா வழிபாட்டுரிமையை திமுக அரசின் போலீஸ் தடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
பெரம்பலூர் – வேப்பந்தட்டை தலித் இளைஞர் படுகொலை ! கொலைக்குக் காரணமான போலீசை கைது செய் !
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கம்: போராடிய மக்கள் மீது வழக்குப்பதிந்த தி.மு.க. அரசு
டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.