Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய கலாச்சாரம்

புதிய கலாச்சாரம்

புதிய கலாச்சாரம்
142 பதிவுகள் 39 மறுமொழிகள்

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

சாரு நிவேதிதா, கல்வி கார்பரேட்மயம், ஆன்மீக வல்லரசு, தலித் மாணவர்கள், தி ரெஸ்ட்லர், ஊழல் எதிர்ப்பு, எக்ஸ்கியூஸ் மீ, பாலியல் வன்முறை, மூக்குக் கடலை, இசுலாமியப் பெண்கள்,

இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!

பிரான்ஸில் ஹிஜாப் தடை செய்யப்பட்டு பெண்கள் தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

ஆதிக்க சாதிவெறியர்களின் பிடியில் இருக்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீது நிகழும் வண்கொடுமையின் இரத்த சாட்சியங்கள்!

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.

ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?

பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை.

ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி?
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

கேப் விடாமல் உலகை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு.

ஆன்மீக வல்லரசு!

அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது....... ஆன்மீக வல்லரசு!

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன 'மேல்' சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

வேசி… அறம்… அனுபவம்..!

ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள்.

காங்கோ சிறுகதை: கடன்

நல்லா இருக்குது உங்க கத... நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது... ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க...

கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!

பெரும்பான்மை மக்களை சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது

சிறுகதை:மட்டப்பலகை!

"செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க."

மயிருக்குச் சமம்!

தேசிய வளர்ச்சி விகிதம் பற்றி கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ''ஆன்மீக ரீசார்ஜ்'' என மதத்தைச் ''சுரண்டல் லாட்டரி'' போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.