Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
238 பதிவுகள் 14 மறுமொழிகள்

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

உங்கள் வீட்டிற்குள் கும்பல் நுழைந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால்......

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்

சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!

40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வெவ்வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரச பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

மோடியை விவசாயத்தில் வளர்ச்சியைச் சாதித்தவர் என்றும் கொண்டாடுகின்றனர். விவசாயிகளுக்கு குஜராத் சொர்க்கபுரியா? மோடி அரசு விவசாயத்தில் அப்படி என்ன ‘புரட்சியை’ச் செய்துள்ளது?
லண்டம் கலவரம்

இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!

வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது

உள்ளாட்சித் தேர்தல்கள்: உள்ளூரைக் கொள்ளையடிக்க ஒரு ஏற்பாடு!

உள்ளூராட்சி முறையும் தேர்தல்களும், அவற்றுக்குத் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடுகளும் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதாகவும் ஆழமாக்குவதாகவும், ஒரு பம்மாத்து தொடர்ந்து நடந்து வருகிறது.
லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.

வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!

ஏழை நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் எத்தகையதொரு சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி அவலத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வாழ்நிலை, ஒரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.

வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?

பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற நோக்கம்தான் மையமானது.

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்றான மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால்...? எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!

நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!

புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ‘அம்மா’வின் வேண்டுகோளை புறக்கணித்ததையடுத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது, ஜெ அரசு

கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு... போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

வாச்சாத்தி, பரமக்குடி துப்பாக்கி சூடு, ஹினில் ட்யூப், உள்ளாட்சித் தேர்தல், கூடங்குளம், வறுமைக்கோடு, மோடி, தொழிலாளர் போராட்டம், லிபியா, வங்கதேசம், நோவார்ட்டிஸ் வழக்கு, விவசாயிகள்,

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.