வினவு களச் செய்தியாளர்
NSA -வில் தோழர் வேல்முருகன் கைது ! இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா ? அமுதாவின் கேள்வி !
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலங்குளம் பகுதி தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் வேல்முருகனின் மனைவி அமுதா!
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமது நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுத்த மூதாட்டியைக் கைது செய்தது அடிமை எடப்பாடி அரசின் எடுபிடி போலீசு. தாம் உழைத்து பண்படுத்திய நிலத்தை தம்மிடம் இருந்து பறிக்க நினைக்கும் அரசை எதிர்க்கும் அந்த மூதாட்டியின் பேட்டி
NSA சட்டத்தில் கடையநல்லூர் கலிலூர் ரகுமான் – இரு மகன்கள் | குடும்பத்தினர் நேர்காணல் !
என்.எஸ்.ஏ சட்டத்தில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் கலிலூர் ரகுமான் அவரது இரு மகன்கள் முகமது அனஸ், முகமது இர்சத் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி, தாயார், தம்பி பேசுகின்றனர் - வீடியோ.
லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் 18-06-2018 முதல் வேலை...
NSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. முத்தரசன் | பீட்டர் அல்போன்ஸ்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ்.
துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன் | விடுதலை ராஜேந்திரன் | பேரா வீ.அரசு
துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை! கண்டிக்கிறார்கள், சென்னைப் பல்கலை கழக பேராசிரியர் வீ. அரசு; திராவிடர் விடுதலை கழகத்தின் விடுதலை இராசேந்திரன் மற்றும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
விசாரணையின்றி சிறையிலடைப்பது ஜனநாயக விரோதம் | நீதிபதி அரிபரந்தாமன் | PUCL சுரேஷ்
மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது ! சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது ! இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன? அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
போராடும் மக்களை ஆதரிப்பது தேச விரோதக் குற்றமா ? தோழர் தியாகு கண்டனம்
போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா? தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.
தூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி !
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி | பேராசிரியர்கள் உரை
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.
கடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் ! வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி. விரிவான தகவல் காணொளியில் ..