காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !
பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.
சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !
அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)
பாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.
கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?
தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.
தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !
மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.
ஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !
ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.
DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !
சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4
1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது.
தா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்
சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
சிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா ?
பொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?
நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?
சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !
கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா?