கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
கூடங்குளம் அணு மின்நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது
மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!
சென்னை பூந்தமல்லியில் நாளை 20.11.2011 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தும் கருத்தரங்கம்! அனைவரும் வருக!!
ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!
இந்திய மருத்துவ துறை வரலாற்றில் தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறை
அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!
தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!
மக்கள் திரள் போராட்டம் என்பது பகுதியளவிலும் நடைபெறக் கூடியது. பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதை விருத்தாசலம் பகுதி மனித உரிமை பாதுகாப்பு மையம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.
ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி!
சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளனர்.
வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?
பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவருகிறது. பெங்களூர் போன்ற பெரு நகரங்கள் அவற்றின் முதன்மை இலக்காக உள்ளன. தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் எவற்றையும் மதிப்பதில்லை. மிகக் கொடியமுறையில் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.
மராட்டியத்தில் துப்பாக்கி சூடு: காக்கை குருவிகளா விவசாயிகள்?
கார்பரேட் முதலாளிகளின் நலனுக்காக விவசாயிகளின் நிலத்தை மட்டுமல்ல, அவர்களின் உயிரையும் பறிக்க ஆளுங்கும்பல் தயங்காது என்பதுதான் மாவல் துப்பாக்கிச் சூடு உணர்த்தும் உண்மை
மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!
உங்கள் வீட்டிற்குள் கும்பல் நுழைந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால்......
முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!
நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானங்கள் வெடித்துச் சிதறியபோது அதனை பயங்கரவாதம் என்றது அமெரிக்க அரசு. இன்று அதே நியூயார்க்கில் வெடித்திருக்கும் இந்த மக்கள் போராட்டத்தைக் கண்டு இது வர்க்கப் போர் என்று கூக்குரலிடுகின்றனர் அமெரிக்க முதலாளிகள்.
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!
காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக நித்தம் போராடி, சமூகரீதியான உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி, குடும்பத்தினரால் 'சம்பாதிக்கத் துப்பில்லாதவன்' என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர வருமானமில்லாததால் திருமணம் என்ற கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.
சல்வா ஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!
40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வெவ்வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரச பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?
இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!
வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !