Monday, April 21, 2025

சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!

சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.

லெபனான் மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது.

லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்

தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்! பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!

லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.

காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.

மூன்று குற்றவியல் சட்டங்கள் – சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்

"பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு" - சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம் 11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத்...

78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?

உண்மையான சுதந்திரத்திற்காக மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !

இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?

சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!

ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர் - மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது. வங்கதேச மக்களின் இந்த மாபெரும் எழுச்சி இந்தியாவில் உள்ள மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பாசிச மோடி - அமித்ஷா கும்பலை விரட்டியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்! மக்கள் அதிகாரம் கோரிக்கை

ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினரும் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் மக்களுக்கு இன்னல் விளைவித்து வருகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை! பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

எத்தனை பேர் இறந்தாலும் விடுதலை உணர்வு ஒருபோதும் அடங்கப் போவதில்லை.

ஒன்றிய அரசு ஊழியர்கள் பாசிச ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்வதற்கான தடை நீக்கம்! பாசிசமயமாகும் இந்திய அரசு!

பாசிச மோடி - அமித்ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டில் தற்பொழுது அந்தத் தடை மீண்டும் விலக்கப்பட்டு, ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!

மூன்று வேளை உணவை சாப்பிடுகின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இந்த நிலையில் தங்கத்தின் விலையை குறைத்து விட்டோம், விண்வெளி சாதனங்களுக்கான பொருட்களின் விலையை குறைத்து விட்டோம் என்கிறது மோடி அரசு.

அண்மை பதிவுகள்