மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.
உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !
பல வழக்கறிஞர்கள் இணைந்து உண்மை அறியும் குழுவாக கடந்த வாரம் மக்களிடம் பாதிப்புகளை நேரிடையாக கேட்டறிந்து அறிக்கையாக தொகுத்து உள்ளனர். இந்த அறிக்கையை சேப்பாக்கம் பத்திரிக்கை மன்றத்தில் (CPC) இன்று (31/01/2017) மதியம் 1:00 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள்.
காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !
காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டணமின்றி சட்ட உதவி செய்ய சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். தங்கள் முகநூல் பக்கங்களிலும், வாட்ஸப் குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !
போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ
நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள்.
கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம் என்று கோக் - பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை.
கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.
புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா – கோவன் பாடல்
நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம், அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.
மெரினா : போலீசு பயங்கரவாதம் – ஊடக மாமாத்தனம் ! வீடியோ
மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.
மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !
மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க முடியுமா?”
நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !
வழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.
சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”