குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்
Puthiya Janayakam april 2018 E-book | புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 இதழின் மின்னூல் பதிப்பு.
நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு ? என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !
பாபர் மசூதியை கடப்பாரையை வைத்துத்தான் இடிக்க வேண்டும் என்பதில்லை, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் இடிக்கலாம் என்ற சாத்தியத்தை சங்க பரிவாரத்துக்கு புரிய வைத்த தீர்ப்புதான் 2010 -இல் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு.
பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !
மத்திய மகுடம் சரியத் தொடங்கிய கடைசி நேரத்தில் ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு உமாபாரதி கூச்சலிட்டார்: ”ஏக் தாக்கா அவர் தோ, பாபரி மஸ்ஜித் தோடு தோ.''
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலையை வைக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிட்டு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !
1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.
புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !
புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.
பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!
நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
தமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது.
வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !
விஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 1,88,287 கோடி ரூபாய் பெறுமான கடன்களைக் கமுக்கமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, மோடி அரசு.
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !
லல்லு பிரசாத் யாதவ் மீதோ ஆ.ராசா மீதோ ஊழல் வழக்கு என்றால், அதனை விசாரித்து உச்சநீதி மன்றம் தண்டிக்கலாம், அல்லது விடுவிக்கலாம். உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு என்றால், அதனை யாரிடம் முறையிடுவது?
பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!
ஜனநாயகத்தின் "நான்காவது தூணாக"ச் சொல்லப்படும் செய்தி ஊடகங்களைப் நிலை, அத்தகைய முதலாளித்துவ ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்!
வெறும் ஆறே ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்களைக் கடத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள் இந்த பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்.