பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?
பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக் கொலை செய்பவனே... நினைவஞ்சலி செலுத்துவதும், புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே மலர்வளையம் வைப்பதும், இறந்தவர்களுக்கல்ல
வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!
"ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்'' என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்
பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி!
மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வெள்ளையரை விரட்டியடித்தார் பூலித்தேவன், அவரது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
முகலாயர் வீழ்ச்சிக்குப் பின் 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்பட உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்
மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா
வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிது. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ்
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
சோவியத்தில் நிலவிய ஆட்சி முறை, ஜனநாயக உரிமை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும்.
நான் கோவன் ஆனது எப்படி?
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று குறிப்பிட்டாரே மார்க்ஸ்,
உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் - ஸ்டாலின்.
தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் !
ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன் ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது.
கவிஞர் சுகுமாரன் நினைவில் கா….ர…ல் மார்க்ஸ் !
மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை" என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.