என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !
இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு.
லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்
மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார் தோழர் லெனின்.
தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !
மாமேதை எங்கெல்ஸ் – 126-வது ஆண்டு நினைவுதினம் !
தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைபடுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் எங்கெல்ஸ்-ன் 126-ம் ஆண்டு நினைவு நாள் இன்று !
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?
செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !
திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் - விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர், தோழர் ராமாராவ்.
தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !
1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி
கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...
மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !
முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.
மார்க்சின் தர்க்கவியல் என்ன ? | மார்க்ஸ் பிறந்தார் – 26
மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின்.
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே.”
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்றார் லெனின். மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 24-ம் பாகம்
பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் ?
என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மார்க்ஸ் பிறந்தார் தொடர் பாகம் 23
எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை – மார்க்ஸ்
ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் மதிப்பிடுகிறார் காரல் மார்ஸ்...