ஜாக்டோ-ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!
அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வின் திசை எது?
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.
முருகனைப் பற்றிய பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!
தமிழரின் பழமையான நாட்டார் தெய்வமான முருகன் வழிபாடானது, குறிஞ்சி நிலத்தின் காவலராகத் தொடங்கி, காலப்போக்கில் பக்தி இயக்கங்களின் வழியே திசைமாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் தலையீடுகள், முருகனுக்கான தமிழர் வழிபாட்டை மாற்றி, முருகனை வேத மரபுகளின் கீழ் அமையச் செய்தன.
திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!
எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.
மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும்
இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.
மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்
சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.
இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
சாதிவெறிக் கொட்டமும் தியாகி இமானுவேல் சேகரனின் அவசியமும்
"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கார்ப்பரேட் கூலிப்படை கும்பல், போலீசு, அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர், அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளடங்கிய சிலந்தி வலையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா, அஞ்சலை, மலர்கொடி போன்றோர் இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியத்தின் அங்கம்.
சொந்த மக்களை அகதிகளாக்கும் “கார்ப்பரேட் திராவிட மாடல்” அரசு
பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்: யார் குற்றவாளி?
தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.
கள்ளச்சாராய மரணத்திற்கு ₹10 இலட்சம் கொடுப்பதை எப்படி பார்ப்பது?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். பத்து லட்சம் கொடுத்தவுடனே குணமாகி வீட்டுக்கு சென்றவனெல்லாம் மிச்ச சரக்கைக் குடித்துவிட்டு செத்து போகிறார்கள். மருத்துவமனையில்...
தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?
ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?
தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.