Wednesday, April 16, 2025

“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!

கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.

ஹோலி பண்டிகை: காவி கும்பலின் அடுத்த ஆயுதம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு விநாயகர் சதுர்த்தி, இராம நவமி போன்ற இந்து மத பண்டிகைகளும் மத ஊர்வலங்களும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன.

“நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

தினசரி வேலை நேர வரம்புகளை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டத்திலிருந்து ஐ.டி. துறையின் விலக்கு நீக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரியது.

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.

பஸ்தர்: பழங்குடி செயற்பாட்டாளர் ரகு மிடியாமி என்.ஐ.ஏ-வால் கைது

இப்பிராந்தியத்தில் சட்டரீதியாகப் போராடுவதே தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அவ்வாறு போராடுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் மீது கார் ஏற்றிய திரிணாமுல் அமைச்சர்

மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் கண் பகுதியில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாங்கும் சக்தியற்றவர்களாக 100 கோடி இந்திய மக்கள்

பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் ப்ளூம் வென்ச்சர்ஸ் குறிப்பிட்டுச் சொல்கிறது.

மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்

பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.

தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்

ஏ.பி.வி.பி கும்பல் மீன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் புகுந்து அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மாணவர்களைத் தாக்கியுள்ளது.

தெலங்கானா சுரங்க விபத்து: தொழிலாளர்களைக் கைவிட்ட அரசு!

சுரங்கத்தில் அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நிறுவனம் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது எட்டு தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்துள்ளது.

பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!

தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி

வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.

கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

உத்தரகண்ட்: புத்தகக் கண்காட்சியைத் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி குண்டர்கள்

”நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.”

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

அண்மை பதிவுகள்