மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்
ஹிட்டாச்சி இயந்திரங்களை மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.
காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்
பாலைவனம் ஆகுது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு! சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே, விழித்தெழு, வீறுகொண்டு போராடு!
பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
கோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
இந்த சிறப்பு நிலைமைதான் மத வெறியர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஜனநாயக அமைப்புகளின் நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை வழக்கு மிரட்டல் போன்ற பல்வேறு வகைகளில் ஒடுக்குகிறது.
மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், "ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்" என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.
கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !
வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.
அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை
மணிப்பூர் எனும் சிறிய மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல் - கொட்டடிச் சித்திரவதைகளில் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்?
மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
திருச்சி : தடையை மீறி நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம்
இது ஜனநாயக நாடு மக்களுக்கான எல்லா உரிமைகளும் உள்ளது என வாய்க்கிழிய பேசுகின்றனர். ஆனால் சாதாரண பேச்சுரிமை, கருத்துரிமை கூட கிடையாது. நம் உரிமைக்காக நாம் போராடுவதே மிகப்பெரிய குற்றம் என்கின்றனர். இதில் நேரடியாக நீதிமன்றமே தலையிடுகிறது.
உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?
"கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்"
திருச்சியில் திருட்டு டாஸ்மாக் – ம.க.இ.க நேரடி நடவடிக்கை
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு.
தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !
சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காரித்துப்பினர், இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்புக் கொடுத்து மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது.
இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்
குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும்
இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !
எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது.