கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்
கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
கந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !
பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.
ஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு !
தனது அடிமைகளின் வாழ்வோ! சாவோ! அது தனது கையால் தான் இருக்க வேண்டும் என்பதுதான் கோமளவல்லி ஜெயாவின் விதந்தோதப்பட்ட நிர்வாகத்திறன். ஆனால் இராஜஸ்தானின் ‘மகாராணி’ வசுந்தரா ராஜே சிந்தியா, கோமளவல்லியை விட ஒரு படி மேலே போயிருக்கிறார்.
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கில், "வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை" என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.
அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !
ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.
நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !
மக்கள் அதிகாரம் தலைமையில் உள்ளூர் விவசாயிகள் பொதுமக்களில் சிலர் என 20 பேர் கொண்ட குழு பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை காமராசர் பல்கலை – தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி
‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்த நூல், ஒருவகையில், தவறுக்குத் துணை போகாத மு.ராமசாமி அவர்களின் விளக்கமாயும், இன்னொருவகையில், கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது.
தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !
ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ரவுடிக்கே உரிய பாணியில் மிரட்டியும் பார்க்கிறது நிர்வாகம்.
வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !
திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா, மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போராடுபவர்களை மிரட்டுகிறார்.
எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !
நீதிமன்ற உத்தரவு : தினசரி கொடியேற்றி தேசியகீதம் பாடு !
’இல.கணேசன்’ சொன்னது போல, ஒரு நாட்டிற்காக இந்த மாநிலத்தையே ’தியாகம்’ செய்யும் அளவிற்கு தேஷபக்தியை நமக்கு வளர்க்கத்தான் நீதிபதிகள் இடையறாது சிந்திக்கின்றனர்.
குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
காஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர்.
கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !
ஏரியை பராமரிக்காத இந்த துப்புகெட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாராய ரவுடியான ஜேப்பியார் கல்லூரிக்கு சாலை அமைப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்!