விருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்
பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்
இது தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. தமிழகத்தை கொள்ளையடித்த, சீரழித்த ஒரு கொள்ளை கும்பலின் தலைமை ! ஜெயா-சசி கும்பலை தமிழகத்தின் தீய சக்தியாக கருத வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு மக்களின் இந்த செயல்தான் பாடமாக அமையும். நீதிமன்றத் தீர்ப்புக்களை கண்டு எந்த ஊழல்வாதியும் பயப்பட போவதில்லை.
மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை
வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
போலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?
உண்மையான சமூக விரோதிகள் போலீசுதான் என்பது ஊடகங்கள் மூலம் மக்களிடம் அம்பலமாகிப் போனதால் தற்போது கண்துடைப்பு விசாரணைக் கமிசன் அமைத்து நாடகமாடுகிறது அரசும் போலீசும்!
ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை : மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி
மக்கள் விரோதமாக மாறிய, நெருக்கடிக்குள் சிக்கிய இந்த அரசுகட்டமைப்பை சரி செய்யலாம் என மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சிதான் சசிகலாவா? ஓ.பி.எஸ்ஸா? என நிற்கிறது.
ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!
ஜெயலலிதா யாரையும் நம்பவில்லை. சந்தேகம், பயம் காரணமாக தனது கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், மன்னார்குடி குடும்பத்தை உளவுத்துறையைக் கொண்டு வேவு பார்த்தார். பாசிஸ்டுகள் தமது நிழலைக்கூட நம்புவதில்லை. அதைக் கண்டும் அஞ்சும் கோழைகள் அவர்கள்.
மெரினா வன்முறை – வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு அறிக்கை
மக்களோடு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக தான் தமிழக மக்களுக்கு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம். அறிக்கையில் ஒவ்வொரு சாட்சியங்களையும் விரிவாக பதிவு செய்துள்ளோம்.
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.
போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !
போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும்.
பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !
குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !
தானே உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், மரபு ஆகியவற்றுக்கே எதிராகத் திரும்பித் தோல்வியடைந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்பு. இந்தத் தோல்வியின் எடுப்பான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உதாரணமாக விளங்கியவர்தான் ஜெயா.
ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்
போலீசு ஆய்வாளரை அழைத்த வங்கி மேலாளர், வங்கியில் பணம் காலியாகி விட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார்.
பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !
முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !
கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவீடும்! அதுனாலதான் வெறுத்துப்போய் மருந்தடிக்கிறாங்க!
பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?
இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.