வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!
போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!
NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.
தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!
இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. ஆனால், நாம் காலனியாதிக்க காலத்திலேயே போராடிப் பெற்ற உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. நமது உரிமைகளைப் பாதுகாக்க சங்க - அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்று சேர அறைகூவல் விடுக்கிறோம்.
காக்னிட் உளவு செயலி: டிஜிட்டல் பாசிசத்தை ஏவும் மோடி அரசு!
வேவு பார்ப்பதன்மூலம் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்களை முன்னறிந்து முறியடிக்க முடியும்; நீதித்துறையை - நீதிபதிகளை கட்டுப்படுத்த முடியும். கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்வி கேட்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் அறிவுஜீவிகளை வேட்டையாடவும் முடியும்.
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!
பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?
தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!
பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
வனவாசிகளின் நில உரிமையை மறுக்கும் தமிழ்நாடு அரசு!
மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) வாழ்வாதாரமே தடைபட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.
மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!
இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும்.
சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!
ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!
‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?
தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!