பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ
மற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !
கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும்.
காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்
இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க... இதுல எப்படி சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க?
இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !
ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.
சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் !
சாதகமான தீர்ப்பைப் பெற வேண்டுமென்றால், “பிரசாதம் தேவை. நாம் பிரசாதம் கொடுக்க வேண்டும். கொடுத்தே தீர வேண்டும்” என லஞ்ச விவகாரத்தில் சதி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பேசியுள்ளனர். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !
தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !
ஆதார் தகவல்கள் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அம்பலப்படுத்திய ட்ரிப்யூன் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர்கள் ரச்சனா கைரா (Rachna Khaira) மீது டெல்லி சைபர் பிரிவு போலீசார் மூலம் வழக்கு போட்டுள்ளது.
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட்.
கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !
“அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னால தான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.”
குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
”சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்"
கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி
கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே ! விடுதலை செய்!
தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தன்னை விசாரணைக் கைதியாக நிரந்தரமாகவே சிறையில் வைத்து, சட்டப்படியே கொலை செய்கின்ற நோக்கத்துடன்தான் தற்போது கைது செய்திருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் கோபாட் காந்தி.