வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்
ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.
கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?
நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.
மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல்! தமிழ்நாடே எச்சரிக்கை!! | தோழர் ரவி
மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் காவிக் கும்பல்!
தமிழ்நாடே எச்சரிக்கை!! | தோழர் ரவி
https://youtu.be/x8fhNJPBCn8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு
தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties - PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை
கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது
உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.
இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை
1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது
ஹிண்டன்பர்க் அறிக்கையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்
இத்தீர்ப்பு வந்த உடனேயே ”ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி” என கௌதம் அதானி எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகிறார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!
பாசிச கும்பல் கால்பதிக்க முடியாத எந்தவொரு மாநிலத்தையும் ஒட்டுமொத்தமாக யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டு, மாநில அந்தஸ்தை பின்னாளில் வழங்கவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறிக்கொள்ளலாம்! இப்படியொரு பேரபாயத்திற்குதான் இத்தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்
காஷ்மீர் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.
தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!
இந்திய அரசியலமைப்பு சாசனத்தையும் ஆளுநரையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலம் தனது கட்டுக்கடங்காத அதிகார வெறியை பாசிச மோடி அரசு வெளிப்படுத்தி வருகிறது.
நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!
இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.