கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!
தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.
சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
சமூக செயற்பாட்டாளர்களை செயலிழக்க வைப்பதே பாசிஸ்டுகளின் நோக்கம்!
மரணத்தின் மூலம் மட்டுமே சாய்பாபாவால் சிறையில் இருந்து விடுபட முடியும், மற்றபடி ஒரு நாள் கூட அவர் வெளியில் இருப்பதை இந்த பாசிச அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !
உணர்ச்சியை தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று முட்டாள்தனமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், காஷ்மீர் ஆஃசிபா வழக்கிற்கு என்ன சொல்ல போகிறார்கள்?
வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.
சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!
இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.
பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!
ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.
வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!
ராவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!
‘புல்லி பாய்’ – ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலிகள் மூலம் முஸ்லீம் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுப்படுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம், நீதிமன்றம் என்பது குற்றவாளிகளின் கூடாரமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்நிலையாகவும் மாறிவிட்டது என்பதை நம்பால் உணர முடியும்.
பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.
தேவதாசி முறையை நவீனமயமாக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !
பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தும் இத்தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் ஆணாதிக்க தன்மையை நமக்கு திரைமறைவின்றி அம்பலபடுத்தி காட்டுகிறது.
தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க தவறிய இந்திய சட்ட அமைப்பு || இஷா சிங்
இந்திய குற்றவியல் நீதி அமைப்பு, “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி” என்பதை பெரும்பான்மையாக தொடர்வதைக் காட்டிலும், தனிநபர் சுந்திரத்தைக் காக்க வடிவமைக்கப்படவில்லை.
தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!
கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன
ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.