கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!
மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.
சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!
வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.
கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!
காசிருந்தால்தான் கல்வி என்ற அவலத்தை ஒழிப்பதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகு வேலையை பார்கின்றனர் சசிகுமாரும் சூர்யாவும்
பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!
பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா.
பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!
சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், ஐ.ஐ.டி மாணவரின் விந்தணு தானம் தேவை என ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர்
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை
என் பெயர், 'கடல்சார் பல்கலைக்கழகம்'. அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.
சிவப்புச் சட்டை!
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”
புராணக் கதைகளை விமர்சனரீதியாகப் பார்க்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிடுவதும், மதச்சார்பற்ற காங்கிரசு கூட்டணி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லிப் பல்கலைக்கழகம் அப் பத்வா விற்குப் பணிந்து போவதும் சகிக்கமுடியாத வெட்கக்கேடு.
அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக நித்தம் போராடி, சமூகரீதியான உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி, குடும்பத்தினரால் 'சம்பாதிக்கத் துப்பில்லாதவன்' என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர வருமானமில்லாததால் திருமணம் என்ற கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.
சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!
பள்ளிகளில் சேரும் போது மட்டுமல்ல, பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ் ஆகியவற்றிலும் சாதி, மதம் இல்லை என்றோ, வெற்றிடமாக விட்டோ தர இயலும். இதற்க்காக அரசு வெளியிட்டுள்ள ஆணையை இங்கு படமாகவும், பிடிஎஃப் கோப்பாகவும் இணைத்திருக்கிறோம்.
அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!
ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது பாரத் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.
கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசதத் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சமசுகிருத மொழியில்தான் கல்வி. மிலேச்ச, சூத்திர மொழிகளுக்கு இடமில்லை. மெக்காலே பாணியிலான கல்வித் திட்டத்திற்குப் பதில் வேத, உபநிடத, புராண, இதிகாச, மனுதர்மம் முதலியவைதான் கல்வித்திட்டம். இந்துக்களே அணிதிரண்டு வாருங்கள் !