இன்போசிஸ் நிறுவனத்தின் கோரமுகம்: ஒரேநாளில் 400 ஊழியர்கள் வெளியேற்றம்
"இந்த நிமிடம் முதல் நீங்கள் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் அல்ல. ஆகவே இன்று மாலை 6:00 மணிக்குள் அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். நிறுவனத்திற்குச் சம்பந்தமில்லாத யாரும் வளாகத்திற்குள் தங்கியிருக்க அனுமதிப்பதில்லை"
அரசியல் சுதந்திரமற்ற அடிமை மோடி!
கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.
கௌரவ விரிவுரையாளர்களின் தமிழ்நாடு தழுவிய தொடர் போராட்டம்
பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு.
உடன்குடி: விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி மணமாகாத ஊழியரின் பெற்றோருக்கும் கூட ஓய்வூதியம் கிடையாது. இது, இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரமான மனசாட்சியே இல்லாத பாசிஸ்டுகள் என்பதை உணர்த்துகின்றதல்லவா?
அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்
பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது.
விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்
ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.
மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்
கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி
டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி
https://youtu.be/JUa1VqDJ750
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
காவிக் கும்பலும் போலி மருத்துவமும்
ஐ.ஐ.டி இயக்குநராக இருக்கும் ஒருவர் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுங்கள், உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கோமியம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி விடும் என்பது அறிவியலுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது.
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
தொழில்நுட்ப கல்வியான நுண்கலை துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கலை பண்பாட்டு துறைச் செயலர் கடிதம் எழுதியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.