தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !
இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.
தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் பட்டயைக் கிளப்பும் சென்னை எக்ஸ்பிரஸ் !
ஆகஸ்டு 9-ம் தேதி ஈத் விடுமுறையில் அங்கு வெளியிடப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ஆகஸ்டு 19 -க்குள் கராச்சி நகரில் மட்டும் 40 மில்லியன் ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்து விட்டது
தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.
இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.
கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !
பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
ரசியாவின் அகதியாய் ஸ்னோடன் !
மக்களை உளவு பார்த்தது பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நிறைவில் ஸ்னோடன் இருக்கிறார். அப்படி தங்களை உளவு பார்க்கும் உலக ரவுடியான அமெரிக்காவை என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
பிராட்லி மேனிங் – அமெரிக்க போராளிக்கு 150 ஆண்டு சிறை ?
நடைமுறை அமெரிக்கச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும் இவ்வளவு அப்பட்டமாக யாராலும் அமபலப்படுத்த முடியாது.
மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !
மதம், மொழி, இனம் ஆகிய பெயர்களில் ஒரு ஆதிக்க சக்தியிடமிருந்து பிரிவது, பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளான தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு தங்களை இழப்பதில்தான் முடிகிறது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !
அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.
ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !
தனி மனித சுதந்திரத்தின் முதன்மையான எதிரி அமெரிக்காதான் என்பதை அந்நாட்டு அரசு நடத்திவரும் ஒட்டுக் கேட்பு திருட்டுத்தனங்கள் அம்பலப்படுத்தி விட்டன.
சீனாவில் யுரேனியம் பதப்படுத்தும் ஆலை மூடல் !
சீனாவில் பன்னாட்டு முதலாளிகளின் தேவைகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு அரசு இந்தத் திட்டத்தை ஹேஷானில் இல்லையென்றாலும் வேறு ஒரு இடத்தில் நிறைவேற்றியே தீரும்.
பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் !
பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !
மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் அவர்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. அதனால், தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.